பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[274] கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 குறுக்கிட நமக்கு என்ன உரிமை? என்பது அவர் கருத்து. அதனால் தொடர்ந்து நான் அழைக்கப்பட்டேன். அன்று நான் பாடிய பாடல்களில் இலக்கியச் செறிவு மிகுந் திருந்தது. முடிப்புரை வழங்க எழுந்த தலைவர் உள்ளத்தைக் கிளர்ந்தெழச் செய்து விட்டது. அன்று அவர் பேச்சு, உணர்ச்சிப் பிழம்பாக இருந்தது. என் பாடல்களைப் பாராட்டிப் பாராட்டிப் பேசினார். பலமுறை அவருடைய பேச்சைக் கேட்டிருக்கிறேன். அன்றமைந்ததுபோற்பிறவிடங்களில்அமைந்ததாகத் தோன்றவில்லை. கவியரங்கிற் கற்றுண்கள் சேல்த்தைச் சேர்ந்த அரூர் என்னும் ஊரில் காந்தி நூற்றாண்டு விழாக்கவியரங்கிற்குத் தலைவராக என்னை அழைத்திருந்தனர். என் கருத்திற்கு உகந்த காந்திய நெறிகளைப் பாடலாக்கிச்சென்றிருந்தேன். அமைப்பாளர்கள் நல்லன்பர்கள். மாலை ஆறு மணிக்கு அரங்கம் தொடங்குகிறது. அமைப்பாளர், பாவலர், நான் அனைவரும் மேடையேறி விட்டோம். ஆறுமணி, ஆறரை மணி, ஏழு மணி, ஏழரை மணி என்று நேரம் கடந்து கொண்டேயிருந்தது. ஒருவர் கூடக் கூட்டத்துக்கு வர வில்லை. நாங்களும் எவ்வளவு நேரந்தான் ஒருவர்க்கொருவர் உரையாடிக் கொண்டேயிருப்பது? அமைப்பாளரை அழைத்தேன். கூட்டத்தை நிறுத்தி விட்டா லென்ன? என்றேன். 'இல்லங்க கூட்டம் கொஞ்ச நேரத்தில் கூடிவிடும் என்றார். அவரும் விடுவதாக இல்லை. நிகழ்ச்சியைத் தொடங்கி விடுவோம் என்றார் அமைப்பாளர். என்ன ஐயா, ஆளே வரவில்லை எப்படிக் கூட்டம் நடத் துவது என்றேன். 'கூட்டத் தொடங்கிட்டா, கூட்டந் தானே வந்து சேர்ந்திடுங்க" என்றார். கூட்டத் தொடங்கிற்று. நான் தலைமைப் பாடலைப் பாடினேன். பாடலில் உயிரே இல்லை. உள்ளத்தில் உணர்ச்சியும் இல்லை. அவை கூடினாலன்றோநமக்கும் உணர்ச்சி தோன்றும்? உணர்ச்சியுடன்