பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 275 பாடினால் அன்றோ பாடலில் உயிரிருக்கும்? அவையில்லை, உணர்ச்சியில்லை. அதனால் பாடலில் உயிருமில்லை. பாடலைப் படித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். ஒரு பத்துப் பேராவது வந்திருக்க வேண்டுமே, ஒருவர் கூட வரவில்லை. பாவலர்கள் அரங்கேறித் தம் பாடல்களை முழங்கினார். பாட்டரங்கு முடிந்தது. செயலாளர் நன்றியுரை நவின்றார் (எங்களுக்குத்தான்). நன்றி கூறி மகிழ்ச்சியோடு என்னருகில் வந்தார். நல்ல வேளை! அதோ சற்றுத் தொலைவில் ஏழெட்டுப் பேர் விலகி விலகி நின்று நம் கவியரங்க நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டு நிற்கின்றனர். அவர்களுக்கும் நன்றி கூறியிருக்கலாமே என்றேன். இல்லங்க அதெல்லாம் கல்லுக்காலுங்க என்றார் அவர். கவியரங்கில் கண்ணிர் தேவகோட்டையிலும் காந்தி நூற்றாண்டு விழா நிகழ்ந்தது. கவியரங்கிற்கு நான் தலைவர். காந்தியடிகளுடன் தலைவர் பலரை ஒப்பிட்டுப் பாடினர் பாவலர் பலர் காந்தியும் அண்ணாவும் என்ற தலைப்பில் சொ.சொ.மீ.சுந்தரம் என்னும் அன்பர் பாடினார். இவர் பிற துறையிற் பட்டம் பெற்றவர். எனினும் அழகாகக் கவிதை பாடும் இயல்பினர். அவர் ஒவ்வொரு பாடலிலும் இருவர்க்கும் உள்ள ஒற்றுமைகளை எல்லாம் பாடிவிட்டு, இறுதியில் அண்ணாவின் இயல்புகளைப் பாடினார். அவர்காந்தியடிகளிடம் ஈடுபாடு கொண்டவர். எனினும் அண்ணாவைப் பாடும் பொழுது மாணிக்கவாசகராகி விட்டார். அவரும் உருகினார். கேட்போரையும் உருக வைத்து விட்டார். நான் மேடையில் தேம்பித் தேம்பி அழுதுவிட்டேன். முடிப்புரை சொல்ல வாயெடுத்தேன். பேச்சு வெளிவரவில்லை. சிறிது நிறுத்தி மீண்டும் முயன்றேன். ஒரு சொற்கூட வெளி வந்திலது. பேச்சின்றிக் கவியரங்கம் நிறைவு பெற்றது. --- == அ.தி.மு.கவினர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அரசின் சார்பில் அண்ணா விழா 15.9.77ஆம் நாள் நடத்தினர். தலைவராக என்னை அழைத்தனர். முத்துலிங்கம், முத்துராமலிங்கம், நா.காமராசன், புலமைப்பித்தன் முதலியோர் ஒவ்வொரு