பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 கவியரசர் முடியரசன் படைப்புகள் -10 தலைப்பிற் பாடினார். அமைச்சர் பெருமக்கள் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். முத்துலிங்கம் பாடும்பொழுது தலைப்பை விடுத்து, இலக்கணம் பாடலுக்கு இன்றியமையாதது என்ற பொருளிற் பேசிவிட்டார். அடுத்துப் பாட வந்த காமராசன் மறுப்புரைத்தார். நான் இடையில் எழுந்து தலைப்பில் நின்று பாடுங்கள், பேச்சு வேண்டா மென்றேன் மறுப்பை நிறுத்திவிட்டுக் காமராசன் தமிழர்க்குள் ஒற்றுமையில்லையே என வருந்தினார்; கலைஞர் கவிதையெழுது வதைக் கடிந்து பேசினார்; முதலமைச்சர் ம.கோ.இராமச்சந்திரன் அவர்களைப் புகழ்ந்தார். தமிழ் நாட்டின் படகோட்டிக்குத் துடுப்புப் போடத் துணை செய்வோம் நீங்களும் வாருங்கள் என எனக்கு அழைப்பும் விடுத்தார். பேசி முடித்தார். நான் உடனே அவர்க்கு மறுமொழி பகர்ந்தேன். “நண்பர் காமராசன் தமிழர் பால் ஒற்றுமையில்லாமை கண்டு மிக வருந்திக் கூறினார். அது நூற்றுக்குநூறு உண்மை. பிளவுபட்டுக் கிடப்போரை ஒன்றுபடுத்தவும் விழைகிறார். அதை நான் வரவேற்கிறேன். ஆனால் அவர் அதற்காக மேற்கொண்ட வழி சரியாகத் தோன்ற வில்லை. சோழனைத் தாக்குகிறார். சேரனைத் தூக்குகிறார். இதனால் எவ்வாறு ஒற்றுமை காண இயலும்?” (ஒரே கைதட்டல்) என்றேன். * 'துடுப்புத் தள்ளத் துணையாக வருமாறு எனக்கு அழைப்பும் விடுத்தார். மகிழ்ச்சி. ஆனால் கிளைக்குக் கிளை தாவும் குணம் எனக்கில்லையே. என் செய்வது?” என்றேன். அடுத்து முத்துராமலிங்கம் என்பவரைப் பாட அழைத்தேன். அவர் அரங்கேறிப் பாடாமல் பேசத் தொடங்கி விட்டார். முதலிற் பேசிய முத்துலிங்கத்தை மறுத்து இலக்கணம் தேவையில்லை என்று கூறிக் கொண்டிருந்தார். தலைவர் என்ற முறையில், நானெழுந்து, “பேச வேண்டாம்; பாடலைப் படியுங்கள்” என்றேன். அவர் பேச்சை நிறுத்தவில்லை. பின்னர் இருமுறை சொன்னேன். அடங்கவில்லை, அண்ணன் முடியரசன் மிரளுகிறார் போலும் என்று அவர் சொன்னார்.