பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[2 80] கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 விட்டது. எனினும் வழக்கம்போல நின்றவாறு வணக்கம் என்றேன். அடிகள் வீழ்ந்தவர்க்குத் திருநீறு வழங்கிக் கொண்டே, என்னை ஏற இறங்கப் பார்த்து அவர் யார்?’ என்றார். உடனிருந்தோர் கவியரங்கிற்கு வந்துள்ள முடியரசன் என்று என்னை அறிமுகம் செய்து வைத்தனர். அடிகள் முறுவலித்தவாறு வணங்கா முடியரசரோ? என்று கூறினார். அரங்கத் தலைமைக்கு ஒப்புக் கொண்ட பெருமாள் முதலியார் வரவில்லை. அதனால் அங்கு வந்திருந்த பெ.து.ாரன் அவர்கள் அப்பொறுப்பு ஏற்றார். அடிகளும் வந்தமர்ந்து, ஆர்வத் துடன் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். என்முறை வந்ததும் நானெழுந்து சைவத்திருமடம் பெருமாளக்குத் தலைமை தந்தது. பெருமாள்,துரன் ஆகினர். துரனோ அருகராகினர். அருகரை வணங்கிப் பாடுகிறேன் என்று கூறிப் பாடலைப் பாடி முடித்தேன். (பெருமாள் - மு.ரா.பெரு மாள் முதலியார், திருமால்; துாரன் துரத்திலிருப்பவர். பெ.து.ாரன்; அருகர் - அருகிலிருப்பவர். அருக சமையத்தவர் என இரு பொருள்படல் காண்க) அரங்கம் நிறைவு பெற்றது. பாவலர்க்குப் பணம் வைத்த உறைகளை மேலாளர் வழங்கினார். மேலாளரை அடிகள் அழைத்துக் காதில் ஏதோ மெதுவாகச் சொன்னார். அவர் விரைந்து சென்று திரும்பி வந்து ஒர் உறையை அவரிடம் கொடுக்க அடிகள் வாங்கித் தம் திருக்கைளால் எனக்கு வழங்கினார். ஏனைப் பாவலர்க்கு வழங்கிய தொகையினும் இரண்டு மடங்கு மிகுதியாக 'வணங்கா முடியரசரோ என்னும் வினா எழும்பிய உள்ளத்தை என் பாடல்கள் மாற்றிக் குளிர வைத்தமையை எண்ணி மகிழ்ந்தேன். அடிகள் அருளுள்ளம் அடுத்த ஆண்டும் தருமபுரம் என்னை அழைத்தது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைவர். மறுப்புரையாது இசைந்தேன். குடந்தை வரை சென்ற நான் உடல் நலங் குன்றியமையால் வண்டியொன்று அனுப்புமாறு தொலைபேசி வாயிலாகத் தருமபுரத்திற்குத் தெரிவித்தேன். குடந்தையிலிருந்தே வாடகை