பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பா டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 281 வண்டி எடுத்துக் கொண்டு வருக; இங்கே வாடகை கொடுத்து விடலாம்' என மறு மொழி வந்தது. அவ்வாறே சென்றேன். அரங்கம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. நேரே மேடைக்குச் சென்றுவிட்டேன். கவியரங்கு முடிந்தவுடன் தருமபுரம் திருமடத்து அடிகள் என்னை அருகில் அழைத்து உடம்புக்கென்ன என வினவினார். உடல்நிலையை உரைத்தேன். உடனே அருகிலிருந்தவரிடம் ஏதோ கூற அவர் ஒரு மருந்து (மாத்திரை) கொணர்ந்து தந்தார். அடிகள் வாங்கி ‘இதை யருந்துங்கள் சிறிது நேரத்திற் குணமாகிவிடும்' என்று மாத்திரையும் வெந்நீரும் அருளினார். பின்னர் உடம்பை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள், நீங்களெல்லாம் நீண்ட நாள் வாழவேண்டும் என்று வாழ்த்தினார். கருத்து வேறுபாடிருப்பினும் அதை ஒதுக்கி விட்டு வாழ்த்துக் கூறிய பேருள்ளத்தை அருளுள்ளத்தை எண்ணி மகிழ்ந்தேன். வாழ்த்துப் பெறக் காரணமாக இருந்த என் தமிழன்னையை நினைந்து வணங்கினேன். மதப்போக்கு போடி நாயக்கனுரில் வள்ளுவர் ஈராயிரத்தாண்டு கொண் டாடப்பட்டது. கவியரங்கிற்கு என்னைத் தலைவராக அழைத் திருந்தனர். வள்ளுவரும் ஏசுவும், வள்ளுவரும் முகமது நபியும், வள்ளுவரும் காந்தியும், வள்ளுவரும் அண்ணாவும் என இவ்வாறு தலைப்புகள் தந்திருந்தனர் ஒவ்வொருவராகப் பாடி வந்தனர். வள்ளுவரும் முகமது நபியும் என்ற தலைப்பிற்பாட அழைப்பிதழில் இருந்த பெயரைக் கூறியழைத்தேன். ஆனால் அவர் வரவில்லை. மற்றொருவர் வந்து பாடினார். நிகழ்ச்சி முடிந்தபின் இம்மாற்றத்திற்குக் காரணம் உசாவினேன். 'முகமது நபியை மற்றவர்கள் பாடக் கூடாதாம். இசுலாமியர் தான் பாட வேண்டுமாம் என்று இசுலாமியப் பெருமக்கள் கூறிவிட்டார்கள். அதனாற்றான் இம்மாற்றம் என்ற விடை வந்தது.