பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 3 “இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வாதிகளுள் இணையற்றவர் கவியரசர் முடியரசனார். - முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் “சாதி ஒழிய வேண்டும் எனக் கவிதையிலும், மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள் அவற்றைத் தன் வாழ்வில் கடைப்பிடித்தவர், கவிஞர் முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? எனத் தெரியவில்லை.” - தவத்திரு குன்றக்குடி அடிகளார். பாடப் பிறந்த பழஞ்சபை மாணவன் மூடப் பழக்கஞ் சாடிய பாவலன். இலக்கியம் நிலமா இலக்கணம் அரணாக் கவிதை கோலாக் கற்பனை கொடியா வெல்க தமிழெனும் விறற்கொடி பொறியா யாப்புப் படையா நல்லணி துணையாப் புரட்சி முரசாப் புதுமை துடியாத் தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையா அல்மொழி திணிப்பார் வல்வர வெதிர்த்துத் தொடுமொழிப் போரில் தும்பை சூடியோன் மொழியர சோச்சும் முதல்முடி யரசன் குடியரசு போற்றுங் கொள்கை யோனே. - முனைவர் வ.சுப. மாணிக்கனார். முடியரசர் இவரென்றால் மக்க ளெங்கே? முன்னோடும் பரி எங்கே? படைக ளெங்கே? முடிஎங்கே? அரசெங்கே? முரச மெங்கே? முத்தமிழில் ஒருதமிழ்தான் முடியோ மற்ற இடைத்தமிழ்தான் அரசோ மூன் றாவதான எழிற்றமிழ்தான் முரசோ ஒசரிதான் இந்த முடியரசர் பாவரசர் பாடுகின்றார் நாம் முழங்காலை நிலந்தாழ்த்தி வணங்கிக் கேட்போம்!