பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் படைப்புகள் -10 கொள்கை முழக்கம் செய்தவர் கவிஞர் முடியரசன். குறிப்பாக முரசொலியிலும் முத்தாரத்திலும் அவர் கவிதை இடம் பெறாத நாளே இருக்க முடியாது. இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிற தென்றால். அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம்” - தலைவர் கலைஞர் “கவிஞர் என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று முடியரசனார் அவர்களின் வாழ்க்கையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.” - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். “பாரதியார் என்ற வித்திலிருந்து முளைத்தது பாரதிதாசன் என்ற செடி அச்செடியில் தழைத்தது முடியரசன் என்ற கொடிபுரட்சிக் கவிஞர் பரம்பரையில் புத்துலக உணர்வு படைக்கும் பகுத்தறிவுச் சிந்தனைகளை வடிப்பதில் தேர்ந்தவர் கவிஞர் முடியர சனார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா வழியில் தன்மானச் சுடராகத் திகழ்ந்தவர். அவர் இயற்றிய கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும். கவிஞர் களிடையே ஓர் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் கவியரசர் முடியரசனார்.” - பேராசிரியர் க. அன்பழகன். “என்மூத்த வழித்தோன்றல் முடியரசனே. எனக்குப்பிறகு கவிஞன். முடியரசன்.” - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வேத்தவைப் பாவலரும் வேற்று மொழிகலக்குந் தீத்திறக் காலை தெளி மருந்தே -மூத்த முடியரச ரின்றி மொழிவனப்புச் செய்யும் முடியரசன் செய்யுண் முறை. - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்