பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கவியரசர் முடியரசன் படைப்புகள் -10 பெற்றுக் கொண்டன. ஐந்தாவதாக ஒர் ஆண் மகவு 7.10.1920 இல் பிறந்தது. அம் மகவு நிலைத்து விட்டது. நான்கையிழந்த பெற்றோர், ஒன்றாவது நிலைத்ததே என்று அக்குழந்தையைக் கண்போலப் பேணி வளர்த்தனர்; பெற்றோர் வளர்த்தனர் என்பதை விடத் தாய்மாமன் துரைசாமி வளர்த்தார் என்பதே பொருந்தும், பெரும்பாலும் மாமன் வீட்டில் தான் அக்குழந்தை வளர்ந்தது. அக்குழந்தைதான் துரைராசு என்ற முடியரசன். மறுபிறப்பு பிள்ளைப் பருவத்திலேயே இடையூறு பல ஏற்பட்டு, அவற்றினின்று தப்பிப் பிழைத்திருக்கிறேன். ஒரு நாள் ஆற்றுக்குக் குளிக்கச் சென்ற என் அன்னை, என்னைப் படிக்கட்டில் அமர வைத்துவிட்டுத் துவைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது படிக்கட்டிலிருந்து குனிந்து குனிந்து நீரிற் கைவிட்டு விளையாடிக் கொண்டிருந்த நான், ஆற்றில் விழுந்து விட்டேன். ஆற்றுநீர் இழுத்துச் சென்று, அடுத்த துறையில் துவைத்துக் கொண்டிருந்த ஒர் அம்மையார் காலடியில் விட்டது. அவ்வம்மையார் பதறிப்போய் என்னைத் துக்கிக் காப்பாற்றினார். கல்விப் பயிற்சி துரைராசாக வளர்க்கப்பட்ட எனக்கு அகவை ஐந்தானவுடன் தெற்கு அக்கிரகாரத்தில் உள்ள ஒட்டுப்பள்ளிக் கூடத்தில் அக்கால வழக்கப்படி சேர்க்கப்பட்டேன். பெற்றோர் யாது கருதியோ அங்கிருந்து, வாகம்புளி என்ற இடத்திலிருந்த கூரைப் பள்ளியிற் சேர்த்து விட்டனர். அங்கு எத்தனை ஆண்டுகள் படித்தேன், எந்த வகுப்பு வரை படித்தேன் என்பது நினைவில் இல்லை. இன்பவுணர்வு நான் அடிக்கடி நண்பர்களுடன் விளையாடச் சென்று விடுவேன். கோலிக்குண்டு விளையாடுவதிலும் பம்பரம் ஆட்டுவதிலும் ஆர்வம் மிகுதியும் உண்டு. ஆற்றிற்குச் சென்று மீன் பிடித்து விளையாடுவதிலும், மீனைக் கொணர்ந்து, சட்டியில் நீரூற்றி வைத்து அதை வளர்ப்பதிலும் பேர்.ஆர்வம் காட்டுவதுண்டு.