பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கவியரசர் முடியரசன் படைப்புகள் -10 பின்பு என் கவிதையை வெகுவாகப் பாராட்டினார். துரைராசு! வானொலிக்கவியரங்கில் உன்பாடல்களைக் கேட்கும்போதெல்லாம், நம்ம பிள்ளை இவ்வளவு அருமையாகப் பாடுகிறானே என்று நான் பூரித்துப் போவேன். உன் பாடல்கள் வெகு அருமை, நீயும் எங்கள் இனத்தைத் திட்டித்தான் பாடுகிறாய்; ஆனால் நாகரிகமாகத் திட்டுகிறாய் என்று கூறினார். ஐயா, நான் சாதிகளைச்சாடுவேனே தவிர எவரையும் திட்டிப் பாடுவதில்லை என்றேன். ஆமாப்பா, அதனாலேதான் நாகரிகமாகத் திட்டுகிறாய் என்றேன் என்று சிரித்துக் கொண்டார். பிறிதொருகால் அங்குச் சென்றிருந்த பொழுது அவரைக் காணச் சென்றேன். கண்டு உரையாடிய பின் பேருந்தில் ஏற்றி விட அவரும் உடன் வந்தார். அப்பொழுது மிகவும் தளர்ந்திருந்தார். பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது நான் மறுத்துங்கூட கடைக்கு ஒடித் தேநீர் வாங்கி வந்து பருகுமாறு தாயன்புடன் தந்தது என் உள்ளத்திற் பசுமையாகப் பதிந்திருக்கிறது. தலயாத்திரை என் பெற்றோர் பக்தி மனப்பான்மை மிக்கவர். அதனால் அடிக்கடி 'தலயாத்திரை செல்வது வழக்கம். ஒரு நாள் பல ஊர்களுக்கும் சென்று திருவாரூர்க்கு வந்தனர். அங்கே கமலாலயம்' என்னும் மிகப்பெரிய குளம், கோவிலுக்கு அருகில் உண்டு. அக்குளத்தில் புனித நீராடினோம். சிறுவனாக இருந்த நானும் நீராடினேன். படியில் வழுக்கி நீருள் மூழ்கி விட்டேன். படித் துறையில் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் நீருட் குதித்து என்னைக் காப்பாற்றி விட்டார். முதலில் ஒரு முறை ஆற்றினின்றும் காப்பாற்றப் பட்டேன். இஃது இரண்டாம் முறை. சன்மார்க்கசபை நுழைவு திண்ணைப் பள்ளிக் கூடப் படிப்பு முடிந்து, ஐந்து, ஆறாம் வகுப்பு மேலைச்சிவபுரியிலுள்ள சன்மார்க்க சபையிற் சேர்க்கப் பட்டேன். ஆறாம் வகுப்பு வரைதான் அங்குண்டு. அச்சபையில், மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வுக்காகத் தமிழ் கற்பித்து வந்தனர். சங்கச் சான்றோர் எண்ணத்தக்க மு. அருணாசலம் பிள்ளை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். ஐந்து ஆறாம் வகுப்பிற் பயிலும்