பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 29 எனக்கு ஆங்கிலமும் கணக்கும் நடேசையர் என்பார் கற்பித்தார்; நளவெண்பா, தேவாரம் முதலிய இலக்கியங்களை மல்லிங்கசாமி என்பார் கற்பித்தார். ஆறுமுக நாவலர் இலக்கண வினாவிடை சங்கர நாராயணப்பிள்ளையாற் கற்பிக்கப்பட்டேன். மாணவர்தம் உள்ளங்களிற் பதிய வைக்கவும் விளங்க வைக்கவும் வல்லவர்கள் அவ்வாசிரியப் பெருமக்கள். தமிழ் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறுவேன். செருக்கறுதல் இங்குப் பயிலுங்கால் என்மாமனுக்கு அடிக்கடி மடல் எழுதுவேன். எதுகை, மோனை வருமாறு எழுதுவேன். அங்கு வரும் பெரியவர் களிடமெல்லாம் படித்துக் காட்டிப் பெரு மகிழ்வு கொள்ளுவார் என் மாமன். விடுமுறையில் பெரிய குளத்திற்குச் சென்றிருந்த சமயம் மாமா பணிபுரியும் கடைக்குச் சென்றேன். அனுமந்தப் பட்டியிலிருந்து வந்த பெரியார் ஒருவர் அவருடன் உரையாடிக் கொண்டி ருந்தார். 'என் தங்கை மகன்துரைராசு இவன்தான் என்று என்னை அவருக்கு அறிமுகஞ் செய்து வைத்தார். அப்பெரியவர் முகமலர்ந்து என் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே 'தம்பி உன்னைப் பற்றி மாமா அடிக்கடி என்னிடம் கறுவார். நீ எழுதும் கடிதங்களையும் காட்டுவார்; படித்து மகிழ்வேன். உனக்குச் சரசுவதி கடாட்சம் நன்றாக அமைந்திருக் கிறது; ஆனால் கல்வி வளர வளர இன்னொன்றும் வளரும். அதைக் கருவம் என்று சொல்வார்கள். விழிப்பாக இருந்து, அந்தக் கருவம் வளர விடாமல் தடுத்துக் காத்துக் கொள் தம்பி, அதுதான் புத்தி சாலித்தனம்’ என்று அறிவுரை கூறினார். அவர் என் முதுகில் தட்டிக் கொண்டே கூறிய அறிவுரை, ஆணியடித்தாற் போன்று என் உள்ளத்தில் அழுந்தி விட்டது. இன்றும் அவ்வறிவுரைப்படியே அடக்கவுணர்வுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இவ்வுணர்வு, சான்றோர் பலருடைய பேரன்பை நான் பெறுதற்குக் காரணமாக - துணையாக அமைந்து விட்டது. எனினும் என் பாடல்களில் உணர்ச்சி வேகம் பொங்கிக் கொண்டு வரவேண்டிய விடத்திற்கூட, வேகங்குறைந்தும் பிறழ்ந்தும் வரக் காரணமாகவும் அமைந்து விட்டது. வேகமாகப் பாடிவிடின், படிப்போர் என்னைத் தருக்கன் என வெறுப்பரோ என்ற எண்ணம்