பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கவியரசர் முடியரசன் படைப்புகள் -10 இயல்பிலேயே கூச்சப்படும் தன்மையுடைய எனக்கு ஒரளவேனும் கூச்சத்தை நீக்க உதவியவர் பு.ரா. மீனாட்சி சுந்தரனார். முத்துசாமிப்புலவர், இலக்கியமோ இலக்கணமோ நடத்தும் பொழுது பலமுறை திருப்பித்திருப்பிச் சொல்வார். நாங்கள் நன்கு விளங்கிக் கொண்டோம் என்பதை எங்கள் முகக் குறிப்பால் தெரிந்து கொண்டபின்புதான் அடுத்த பகுதி நடத்தத் தொடங்குவார். அன்று நாங்கள் விளங்கிக் கொள்ளவில்லையென்று நினைத்தால் மறுநாளும் அதே பாடந்தான். இவ்வாறு மனத்தில் அழுந்தக் கூறித் தெளிய வைப்பார். கற்றமுறை 1934 முதல் 1939 வரை அவரிடம் நின்ற வண்ணமே பாடங் கேட்டோம் நடத்தப்பட்ட இலக்கண இலக்கியங்களை நாடோறும் ஒப்பித்தல் வேண்டும்; உரையுடன் ஒப்பித்தல் வேண்டும். ஒவ்வொரு நாளும் நான் பிழையின்றி ஒப்பித்து நல்ல பெயர் வாங்கி விடுவேன். ஆனால் வார் இறுதியில் அவ்வாரம் நடைபெற்ற பாடங்களில் மூலத்தை மட்டும் ஒப்பித்தல் வேண்டும். அன்று தான் தடுமாறு வேன். ஒவ்வொரு நாளும் வாங்குவது நல்ல பெயர். வாரக் கடைசியில் வாங்குவது நல்ல அடி மனப்பாடம் செய்யும் ஆற்றல் என்னிடம் குறைவு. இன்று கேட்டதை நாளை அப்படியே ஒப்பித்து விடுவேன். ஆனால் மறுநாள் மறந்து விடுவேன். மூல பாடங்கள் தாமாக என் மனத்தில் நின்றாலொழிய நான் வற்புறுத்தி நிறுத்த மாட்டேன். மனப்பாடஞ் செய்யாமல் விட்டது எவ்வளவு பெரிய தீமை யென்று இப்பொழுதுதான் தெரிகிறது! 'அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி' என மாணவர்க்குக் கூறப்பட்ட இலக்கணப்படி, புலவரிடம் அஞ்சித்தான் ஒழுகு வோம். இஃது அன்றைய நிலை. ஆசிரியர்களும் அப்படியிருந்தார்கள். அதற்கேற்ப மாணவர்களும் அஞ்சி நடந்தார்கள். இன்று அந்நிலை காண்டல் அரிது. இது சுதந்திர நாடல்லவா? புதுமை நோக்கிச் செல்லும் உலகம் பழைமையைப் புறக்கணிக்கிறது! சுதந்திரம், புதுமை, பழைமை இவற்றிற்குச்சரியான உண்மையான பொருளைக் கண்டு கொள்ளாமல் தடுமாறுகிறது உலகம்! 'உனக்கு அகவை நூறாண்டு என வைத்துக் கொள். முதலிருபது ஆண்டுகள் அடிமையாக இரு; பின் எண்பது ஆண்டுகள் உரிமை