பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் [37. | பட்டபாடு - அடேயப்பா எழுதவே கை நடுங்குகிறது. இந்தப் புலவர் எழுதியதையே எழுதி, சொன்னதையே சொல்லிவருகிறார்களே தவிரப் புதுமையாக என்ன எழுதுகிறார்கள்? புதுமையாக என்ன சொல்லுகிறார்கள்? பழைய சிந்தனைகளைத் தானே அசைபோடு கிறார்கள் என்று கடுமையாகச் சாடிய பாரதிதாசன்தான் குடும்ப விளக்கு என்னும் நூலின் இரண்டாம் பகுதியை, நிறை தமிழாய்ந்த மறைமலையடிகளார்க்குக் காணிக்கையாக்கி மகிழ்ந்தார். மறை மலையடிகளின் பழஞ் சிந்தனையைச் சாடினார்; தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்த பெருமைக்குப் பணிந்து விட்டார் என்று தான் கொள்ள வேண்டும். பாரதிதாசன் பேச்சைக் கேட்ட பிறகு தான் நாடு, மொழி, இனம் பற்றிப் பாட வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. சுயமரியாதைக் காற்று அப்பொழுது மேலைச்சிவபுரியில் மருத்துவர் ஒருவர்க்குக் 'குடியரசு' 'விடுதலை திராவிட நாடு' இதழ்கள் வரும். அவர் எங்களிடம் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்லுவார். குடியரசு", 'விடுதலை’ இதழ்களில் வெளிவரும் கருத்தும் திராவிட நாடு இதழில் அண்ணாவின் மொழி நடையும் (வடமொழிச் சொற்கள் மிகுதியாகக் கலந்திருப்பினும்) எங்கள் உள்ளத்திற் புகுந்து கலக்கத் தொடங்கின. அறிவுக் கண்கள் மெல்ல மெல்ல மலரத் தொடங்கின. H ஓ! நாமும் மாந்தரினந்தான்; அதிலும் நாகரிகத் தொன்மை வாய்ந்த தமிழரினம்! நமக்கென ஒரு மொழியுண்டு; நாடுண்டு; நயத்தக்க நாகரிகப் பண்பாடுண்டு என்ற ஒளி படரத் தொடங்கியது. ஆம்; சுயமரியாதைக் காற்று எங்கள் மனமென்னும் மேடையில் வீசத் தொடங்கியது. மேடையிலே வீசிய அம்மெல்லிய பூங்காற்றின் நலம் நுகர்ந்து இன்புற்றோர் கு. கந்தசாமி, இராம. பெரியகருப்பன் (தமிழண்ணல்) நான் ஆகிய மூவருந்தாம். பின்னர் நலம் நுகர வந்தோர் பலர். எனினும் உறுதியாக நின்று, இன்றுவரை அந்நலத்திற் றோய்ந்து வாழ்ந்து கொண்டிருப்போர் கு. கந்தசாமியும் நானுமே. எது "துவேஷம்’ நாங்கள் பயின்று கொண்டிருந்த தமிழ்க்கல்லூரியில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர் பலர் வந்து தங்கிப் பயின்று வந்தனர். புதுக்கோட்டையிலிருந்து இருவர் வந்து பயின்றனர்.