பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[36 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 என்ற தலைப்புகளிற் பேசினேன். அவ்விழாக்களிற் சொற்பொழி வாற்றிய சி. இலக்குவனார், கரந்தைக் கவியரசு போன்ற பெருமக்கள் என்னைப் பாராட்டி ஊக்குவித்தனர். என் கல்வி வாழ்க்கையில் மூன்றே மூன்று முறைதான் மேடையில் பேசினேன். நடிப்புத்துறை கல்லூரி நாடகங்களில் நடித்துப் பரிசிலும் பெற்றிருக்கிறேன். நகைச்சுவை நடிகனாக, கதைத்தலைவனாக, படைத்தலைவனாக நடித்துளேன். கதைத்தலைவன் கண்ணனாக நான் நடித்த ஒரு நாடகத்தில் இளம்பருவத்துக் கண்ணனாக இராம. பெரிய கருப்பன் என்ற தமிழண்ணல் நடித்தார். இன்று அவர், மதுரை - காமராசர்பல்கலைக்கழகத்தில்தமிழ்த்துறைத்தலைவராகவிளங்குகிறார். அன்று முதல் இன்று வரை ஒன்றியவுணர்ச்சியால் உடன்பிறப் பாகவே என்னுடன் பழகி வருகிறார். கல்வி, செல்வம், பதவி இவற்றால் உயர்நிலை பெற்ற பின்னரும் அவரை வருக என அழையாது, வா என ஒருமை வாய்பாட்டில்தான் இன்றும் அழைப்பேன்; அவரும் அதையே பெருமையாகக் கருதுகிறார். அவ்வளவு எளிமையுடையவர். 'பணியுமாம் என்றும் பெருமை என்னும் குறட் பகுதிக்கு விளக்கமானவர். பெயர் மாற்றம் கல்லூரியிற் பயின்று வருங்காலத்தே திருப்புத்துரில் (முகவை மாவட்டம்) அறிஞர் அண்ணா சொற்பொழிவாற்றுகிறார் என்ற செய்தியறிந்து திரண்டு சென்றோம். தமிழுணர்வு குறைந்துள்ள நிலையை விளக்கிப் பேருரையாற்றினார் அண்ணா. அவர் மேடையில் நின்று பேசினும் கேட்பார்உள்ளங்களிற் புகுந்து அங்கிருந்து பேசுவது போலப் பேசினார். சுருங்கக் கூறின் கேட்டாரைப் பிணித்து விட்டார். நான் சொக்கிப் போனேன். மறு நாளேதுரைராசு என்ற நான் முடியரசன் ஆகி விட்டேன். (துரை - அரசன்; ராசு - அரசன்; துரைராசு - அரசர்க்கரசன் அதாவது முடியரசன்) கருத்து மாற்றம்

  1. அடுத்து அதே ஊரில் பாவேந்தர் பாரதிதாசன் பேசினார்.

வழக்கம் போல் நாங்களும் சென்றோம். பண்டிதமணி, மறை மலையடிகள் போன்ற பெரும் புலவர்கள், பாரதிதாசன் பேச்சிற்