பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாம்க்கைப் பயணம் 35 էք முருகன் வீரமும் வள்ளியைக் கலப்புமணம் செய்து கொண்டமையும் எனக்கு ஈடுபாட்டை ஏற்படுத்திவிட்டன. சீலை திருடியது, வெண் ணெய் திருடியது. இந்திரன் பழி தீர்த்தது மாபாதகந் தீர்த்தது போன்ற நிகழ்ச்சிகள் பிற கடவுளர் மீது இனம் புரியாத ஒர் அருவருப்பை ஏற்படுத்தி விட்டன. வீரப்புலவர் வீர. செல்லப்பனார்க்குப் பின்னர், பு.ரா. மீனாட்சி சுந்தரனார் என்பவர் முதல்வரானார். இருவர் தம் இயல்பும் நேர் மாறானவை. எனினும் மாணவர்களிடம் எளிமையாகப் பழகுவார். உரிமை யோடு எவரையும் டே' என்றுதான் அழைப்பார். அதிகார தோரனை அவரிடம் சிறிது உண்டு. இவர் காலத்தில் மா. குருசாமி என்பவர் ஆசிரியராக வந்து சேர்ந்தார். இவர் உடன் பிறப்பாகவே எங்களிடம் பழகுவார். கல்லூரியில் மாணவர் நன்னெறிக்கழகம் என்னும் பெயரில் மாணவர் மன்றம் ஒன்று உண்டு. கிழமை (வாரம்) தோறும் கூட்டம் நடைபெறும். மாணவர் ஒரு சிலரே அக்கழகத்திற் பேசுவர். பு.ரா.மீ. வந்தவுடன் அனைவரும் பேச வேண்டும் என ஆணை பிறப்பித்து விட்டார். மாணவர் வருகைப் பதிவேட்டில் உள்ள வரிசைப்படி இவ்விருவர் பேசுதல் வேண்டுமென வழியும் வகுத்துத் தந்து விட்டார். வரிசைப்படி என்முறை வந்தது. நான் மேடையில் அதுவரை பேசிப் பழகாதவன், கூச்சமுடையவன்; எழுந்து நின்றால் கைகால்கள் நடுங்கும். இவற்றையெல்லாம் எடுத்துக் கூறிப் பலகால் மன்றாடினேன். முதல்வர் உடன்படாது, பேசித்தான் தீரவேண்டும் என உறுதிசெய்து விட்டார். வேறு வழியின்றிப் புலவர் வீரம்' என்னுந்தலைப்பில் ஒருவாறு பேசி விட்டேன். முதல்வர், டே, இங்கே வாடா என்று அழைத்தார். பேசத் தெரியாது பேசத் தெரியாது என்று ஒப்பாளி வைத்தாயே, நீதான் நன்றாகப் பேசுகிறாயே! இனி அடிக்கடி பேசுதல் வேண்டும். என ஊக்கமூட்டி வீரப்புலவர் என்ற விருதும் அளித்தார். அதன் பின்னர், வீரப்புலவர் முடியரசன் என்றே அறிக்கைகளிற் குறிப்பிடுவார். o மாணவர் கழகம் நடத்திய இரண்டு ஆண்டு விழாக்களில் என்னையே பேசுமாறு பணித்தார். புலவர் உள்ளம் கிழவர் உள்ளம்'