பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 என் கண்ணிற் படலம் படர்ந்து, பார்வை மங்கியிருந்த நேரம் அது எனினும் அவரிடம் கொண்ட பெருமதிப்பால் காரைக் குடியிலிருந்து கம்பம் சென்று, அவரைக் கண்டு மகிழ்ந்து திரும் பினேன். என்பாற் கொண்ட பழைய அன்பு அப்படியே புதுமை யாகவே இருப்பதைக் கண்டு வியந்தேன். என் மகள் திருமணத்துக்குத் தமது முதுமை கருதாது வந்து பெருமை செய்தார். அது மட்டுமன்று என்னுடன் பயின்ற மாணவர்கள் கந்தசாமி, நாராயணசாமி இருவரும் புதுக்கோட்டையிலும் தேவகோட்டை யிலும் ஆசிரியராக இருந்தனர். தாமே நேரிற் சென்று அவர்களைப் பார்த்து வந்தார். இத்தகு நல்லாசிரியர்களையெல்லாம் பெற்ற பேற்றை நினைந்து நினைந்து உருகி உருகி மகிழ்கின்றேன். கடவுட் கொள்கை என் தாய்வழிப்பாட்டனார் வைணவக் கோட்பாடுடையவர்: எந்நேரமும் அவர் நெற்றி, திருமண்ணாற் பொலிவு பெறும்; எப்பொழுதும் ஆழ்வார் வாய்மொழிகளை ஒதிக் கொண்டே யிருக்கும் அவர் வாய், என் மாமன் முருகனிடத்தில் ஈடுபாடு கொண்டவர். திருநீறுதான் அணிவார். நானும் முருகனிடத்தில் ஈடுபாடு கொண்டிருந்தேன். திருநீறணியாமல் இருந்ததில்லை. அப்போது முருகன் மீது பாடல்கள் மிகுதியாகப் பாடியிருக்கிறேன். என் ஆசிரியப் பெருமக்கள் பாராட்டும் பெற்றிருக்கின்றன அப்பாடல்கள். நாடோறும் கோவிலுக்குச் செல்லும் பழக்கம் உண்டு. பலரும் வரும் நேரங்களிற் செல்லேன். அர்த்த சாமப் பூசை நடைபெறும் வேளையிற் சென்று முருகன் முன்னர் அமர்ந்து, கண்ணை மூடி, நாளென் செயும் வினைதானென் செயும்' என்னும் பாடலைப் பலமுறை வாய்க்குட்பாடிப்பாடி வணங்கி வருவேன். 'கார்த்திகை தோறும் மேலைச்சிவபுரியிலிருந்து குன்றக்குடிக்கு நடந்து வந்து முருகனை வழிபட்டுச் செல்லுவேன். நடந்து வந்தால் தானே புண்ணியம்; அப்படியொரு நினைப்பு அப்பொழுது. கடவுட் பற்று உடையேன் எனினும் கண்ணன் முதலிய கடவுளி டத்தில் ஈடுபாடு ஏற்படவில்லை. கடவுட் கதைகளை ஆசிரியப் பெருமக்கள் கூறக் கேட்ட பொழுதும் புராணப் பாடங்களைப் படி த பொழுதும் பிற கடவுளர் செயல்களில் ஈடுபாடு தோன்ற வில்லை. மாறாக அருவருப்பே தோன்றியது என் இளையவுள்ளத்தில்.