பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 39 கொண்ட சமுதாயம் படைக்க, அதன் தடைகளை உடைக்க முனைந்தெழுவ தெக்காலம்? தமிழ்ப்பெரியார் திரு.வி.க. நாங்கள் பயிலுங்காற் சான்றோர் அணிமையிலுள்ள ஊர்களிற் சொற்பொழிவாற்றுகின்றனர் எனத் தெரிந்தாற் போதும்; நண்பர்கள் சேர்ந்து புறப்பட்டு விடுவோம். பெருமக்கள் பொழியும் பயன்தரும் பேச்சுகளைச் செவிமடுப்பதில் அவ்வளவு ஆர்வங் கொண்டிருந்தோம். காரைக்குடியில் நிகழுங் கம்பன் திருநாளுக்கு ஆண்டு தோறும் பெரும்பாலும் சென்று வருவோம். ஒருகால், காரைக்குடி இந்து மதாபிமான சங்க வெள்ளி விழா நடைபெற்றது. தமிழ்ப் பெரியார் திரு. வி.க. தலைவர், ஈ.த. இராசேசுவரி அம்மையார், பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், பேராசிரியர் அ.ச. ஞான சம்பந்தம் முதலான பெருமக்கள் சொற்பொழி வாற்றினர். விழா மூன்று நாள் நிகழ்ந்தது. நானும் நண்பர்களும் சென்று பயன் பெற்றோம். விழா நிகழ்ச்சிகள் முடிவுற்றதும் ஒவ்வொரு நாளும் அமராவதி புதுர்அறிஞர். சொ. முருகப்பனார் நடத்தி வந்த மகளிர் இல்லத்தில் திரு.வி.க. தங்குவது வழக்கம். நாங்களும் அங்குச்செல்வோம். அமைதியின் சின்னமாக விளங்கிய அப்பெருமகனாரை ஒய்வாக இருக்க விடுவதில்லை. ஐயவினாக்கள் விடுப்போம். அவர் முதல் நாள் நிகழ்த்திய பேச்சிலிருந்தும் வினாக்கள் தொடுப்போம். பொதுவான செய்திகளும் பேசுவோம். அனைத்துக்கும் அமைதியாக விளக்கந் தருவார். இடையிடையே குறுக்கு வினாக்களும் உண்டு. மறுப்பும் உரைத்து நிற்போம். பொறுமையாகக் கேட்டு அருமையாக விளக்கி நிற்பார். சில வேளைகளில் மட்டும், திங்களுள் தீத் தோன்றி யாங்கு அவர்தம் இனிய முகத்திற் சினக்குறிப்புத் தோன்றுவதுண்டு. அவ்வேளையில் இப்படிப்பட்ட இளைஞர்களை நாயக்கர்தான் கெடுத்து விட்டார் எனப் பெரியாரைக் கடிந்து கொள்வார். எனினும் வெகுண்டெழாது. எம்மைச் சிறுவர்தாமே என எண்ணி இகழாது, அரவணைத்துப் பேசுவார்; தெளிவு படுத்துவார். பண்டை ஆசான்மார் மாணாக்கரைத் தெருட்டுதல் போல் தாயன்புடன் எமக்குத் தெளிவுரைகள் ஈந்து உவந்தார். கருத்து