பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 | கவியரசர் முடியரசன் படைப்புகள்-1 பூரீறாம பாலகானவினோத சபா காரைக்குடி. 12.2.1944 7.2.44 கடிதம் வந்தது. தான் இடத்திற்கு நேரில் வந்தால் தன்னைப் பார்த்துத் தெரிந்து கொண்டுதான் கம்பேனியில் சேர்த்துக் கொள்ள வேணும். நேரில் வந்து பார்க்கவும். VRm. ANNAMAL For S.R.S. SAB 12.2.44 THE MADURA DEvi BALA VINOTHA SANGEETHA SABA No. 208/44 - Camp கொல்லம் Dated : 9.2.44 NAWAB T.S.R.AJAMANIKAM |

  • D_ தமிழன்பரே! நலன். கடிதம் கிடைத்தது. கல்வித்துறையிலிருந்து கலைத்துறையிற் பிரவேசிக்கக் கருதி மிகத் தீவிர ஆவலுடன் எழுதியிருக்கிறீர்கள். இத்துறையில் ஆரம்ப காலத்தில் ஏதும் பலன் கிடைக்காது. நன்கு பழகித் தேர்ந்தால் எமது தொழிலுக்குப் பயன்படும் நிலையடைந்தால் திறமைக்குத் தக்க ஊதியம் கிட்டும். அதுவரையில் உணவுடை சவரக்ஷணைகளைத்தான் எதிர்பார்க்கலாம். * உண்மையன்பும் உழைப்பு மிருந்தால் யாவும் தானே வந்தெய்தும். சம்மதமாயின் மூன்றாண்டுக்கு உடன்படிக்கை எழுதித் தர வேண்டி யிருக்கும்.

நேரில் இக்கடிதத்துடன் கொல்லத்துக்கு வரவும். பிற பின்னர். தங்கள் டி.என். துரைசாமி (சபைக்காக) நவாபு இராசமாணிக்கம் குழுமத்திலிருந்து வந்த மடல் என் மனத்தைக் கவர்ந்தது. என் அன்னையார், விட்டுப் பிரிய மனமின்றி, அழுது புலம்ப, நான் கொல்லத்துக்குப் புறப்பட்டு விட்டேன்.