பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் [49 அங்கே துரைசாமி என்ற நல்லன்பர் மேலாளராக இருந்தார். வரவேற்று, இனிது பேசி, உங்களுக்குப் பாடல் எழுத இயலுமா? என்றார். எழுதுவேன் என்றேன். 'அப்படியானால், தேவி மேல் ஒர் எண்சீர் விருத்தமும் ஒர் இசைப்பாடலும் எழுதித் தருக" என்றார். அங்கேயே எழுதிக் கொடுத்தேன். பார்த்து மகிழ்ந்த அவர், அங்கிருந்த ஒருவரை அழைத்துப் பாடச் சொன்னார்; பாடல், இசைக்குப் பொருந்தி வந்தது. வாத்தியார் ஈரோட்டுக்குச் சென்றிருக்கிறார்; வந்த பின் 'அவரைப் பார்க்கலாம்’ என்று அங்கே தங்க வைத்து இரவு நாடகத்துக்கு அழைத்துச் சென்றார். அப்பொழுதுதான் எம்.என். நம்பியார்நாடகத்திலிருந்து விலகித்திரைப்படவுலகிற்குச் செல்கிறார். வாத்தியார் பற்று ஈரோட்டு நாடக மாநாட்டுக்குச் சென்றிருந்த நவாபு திரும்பி வந்தார். அவரை, வாத்தியார்’ என்றுதான் அங்குள்ளோர் அழைப்பர். மேலாளர்.துரைசாமி மாடியிலிருந்த அவரிடம் என்னை அழைத்துச் சென்றார். பாடல்களைக் காட்டி என்னை அறிமுகஞ் செய்து வைத்தார். நான் எழுதிய பாடல்களைப் படித்துப் பார்த்து மலர்ந்த முகத்துடன், சரி, நீங்கள் போய் வாருங்கள் என்று கூறி எனக்கு விடை கொடுத்தார். நான் கீழேவுள்ள அலுவலகத்தில் வந்து அமர்ந்திருந்தேன். துரைசாமி வந்தார். வாத்தியாருக்கு உங்களிடம் மிகுந்த பற்று ஏற்பட்டு விட்டது. காரணம் உங்கள் பாடல் மட்டுமன்று. உங்கள் எழுத்து எஸ். டி. சுந்தரத்தின் (திரைப்படத்துறையர்) எழுத்து மாதிரியே இருப்பது ஒரு காரணம். வாத்தியார், சுந்தரம் இங்கிருக்கும் போது பிள்ளை மாதிரி வைத்திருந்தார். தமிழ்க் கல்லூரியிற் கூடப் படிக்க வைத்தார். 'என்றெல்லாம் கூறிவிட்டு, உடன்படிக்கை எழுத வேண்டாம் என்றும் நீங்கள் நடந்து கொள்வதைப் பார்த்து அடுத்த மாதமே சம்பளம் போட்டுக் கொடுக்கும் படியும் வழக்கப்படி சிறிது சிறிதாகவுயர்த்தாமல் தொடக்கத்திலேயே கணிசமான ஒரு தொகை போட்டுக் கொடுக்கும் படியும் வாத்தியார் சொல்லி விட்டார். நீங்கள் பாடல் எழுதலாம்; நாடகம் எழுதித்தரலாம்; நடக்கும் நாடகங்களைத் திருத்தலாம்; விரும்பினால் நடிக்கவும் செய்யலாம்;