பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[52 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 யெழுத்து வாங்க மூணு ரூபாயை வீணாக்கலாமா? என்று பெரியார் சலித்துக் கொண்டே கையொப்பமிட்டார். அடுத்து என் சுவடியை நீட்டினேன். அதையும் பார்த்து விட்டு 'இது எவ்வளவு சாமி? என்றார் மூன்றனா என்று கூறியதும் ம்ம்ம்; இது கெட்டிக்காரப்பிள்ளை' என்ற நற் சான்றிதழ்கொடுத்துவிட்டார். எதிலும் எவரிடத்தும் சிக்கனத்தை எதிர்ப்பார்ப்பவர் பெரியார். பெரியார் என் சிக்கனத்தைப் பாராட்டினும் என் செல்வநிலைக்கேற்ப நான் வாங்கினேன் என்பது அவருக்குத் தெரியாதல்லவா? திராவிடர் கழக மாநாடு அடுத்துத் தென்னுாரில் திராவிடர் கழக மாநாடு, அண்ணாவின் பொறுப்பிலும் தி.பொ. வேதாசலம் பொறுப்பிலும் நடை பெற்றது. அம்மாநாட்டுக்கும் சென்றேன். அம்மம்மா எவ்வளவு பெருங்கூட்டம்! தொண்டர்கள் குடும்பங் குடும்பமாக வந்து குழுமியிருந்தனர். விரிந்து பரந்த பந்தலில் நூற்றுக் கணக்கான தொட்டில்கள் கட்டி விடப்பட்டிருந்தன. குழந்தைகள் தொட்டிலில் படுத்தவாறு, தலைவர்களுடைய சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டிருந்தன. உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஒடிக் கொண்டிருந்தது. கடலனைய மக்கள் கூட்டத்திற் சிறிது பேச்சொலி யெழுந்தது; ஐயா, அமைதிப்படுத்திப் பார்த்தார். அமைதி யுண்டாகாது, சலசலப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. மேடையில் அமர்ந்திருந்த ஐயா, வெகுண்டு, தம் மடியில் வைத்திருந்த சிறு பெட்டி, தாள்கள் அனைத்தையும் மேசைமேல் துக்கிப் போட்டு விட்டு, மாநாடு இந்த அளவில் முடிவு பெறுகிறது; நீங்கள் போகலாம் என்று கூறிவிட்டு அமைந்து விட்டார். கூட்டத்தில் சலசலப்பு அடங்கியது. ஒரு சிற்றொலி கூட எழவில்லை. அமைதி நிலை கொண்டது. மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. அவ்வளவு கட்டுப்பாடாக விளங்கிய திராவிட இயக்கம் இன்று சிதறுண்டு கிடக்கும் நிலையை எண்ணினால், நெஞ்சில் நெருப்புப்பட்டது போலச் சுடுகிறது! இனவுணர்வு அந்த அளவிற்கு மழுங்கி விட்டது! இன்னும் பெரியார் பலர் இந்தத் தமிழினத்திற்குத் தேவைப்படு கின்றனர்? 'வித்துவான் முற்றுப் பெறாமுன், குழிபிறையென்ற ஊரில் தொடக்கப்பள்ளி ஆசிரியனாக அமர்ந்தேன். 1945 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் எட்டாம் நாள், காரைக்குடியில் ஒரு திரைப்பட