பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 53 அரங்கில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. நானும் சென்றிருந்தேன். சேலம் மாநாட்டுத் தீர்மானத்தைப் பேராசிரியர் க. அன்பழகன் முன்மொழிந்து பேசினார்; நான் வழி மொழிந்து பேசினேன். மேடையில் அமர்ந்திருந்த அண்ணா, இவர்தான் முடியரசனா?' என்று வியப்புடன் வினவினார். அக்கிழமை வெளிவந்த திராவிட நாடு' இதழில் என் பாடலொன்று வெளிவந் திருந்தது; கொச்சியில் திவானாக இருந்த அறிஞர் ரா.க. சண்முகனார் கருத்தை மறுத்துப்பாடியிருந்தேன். அண்ணா எழுதிய குறிப்புடன் அப்பாடல் வெளியிடப்பட்டிருந்தது. அதை மனத்திற் கொண்டு தான்.அண்ணா வினவினார். திராவிட நாடு இதழில் இரண்டாவதாக வெளி வந்த பாடல் இது. இதற்கு முந்திய இதழில் சாதி என்பது உனக்கேனோ? என்ற எனது இசைப்பாடல் வெளிவந்தது. இதுவே அச்சில் வெளிவந்த எனது முதற்பாடல். மாநாட்டில் ம்ாற்றுக்கட்சியினர் பலர் வந்து, பல வினாக்கள் விடுத்தனர். அவற்றுள் ஒன்று நினைவிற்கு வருகிறது. ஆரியர் திராவிடர் என்று சொல்கிறீர்களே, அனைவரும் ஒன்றாகக் கலந்து விட்டனர். ஆரியர் திராவிடர் என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?" என்பது வினா. அதற்கு ஐயா தந்த எளிமையான விடை, அருமையினும் அருமையென்று பாராட்டப்பட்டது. இதோ விடை: "நேரே கோவிலுக்குப் போ; தங்குதடையில்லாமல் எவன் கடவுள் சிலை வரை போகிறானோ அவன் ஆரியன்; உள்ளே செல்ல முடியாமல் அர்த்த மண்டபத்திலேயே எவன் நிற்கிறானோ அவன் திராவிடன். இவ்விடையைக் கேட்டவுடன் கொட்டகையே அதிர்ந்து விட்டது. இயற்கைச் சிந்தனை, வாழ்க்கையை ஒட்டிய சிந்தனை ஐயாவின் சிந்தனை: தலைமறைவு 'வித்துவான் தேர்வை முடிக்காமல் கட்சி கட்சியென்று திரிந்து கொண்டிருந்த என்னைப் பெரியசாமி என்ற அன்பர் அழைத்து, தம்பி உன் கொள்கைகளையோ கட்சியையோ நான் குறை சொல்ல வில்லை; இக்கொள்கைகள் நாட்டிற்குத் தேவையென்று நம்புகிறாய். நீ மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் போது ஒரு பட்டம் பெற்ற வனாக இருந்து சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள்; இல்லை யென்றால் படிக்காதவன் சொல்கிறான் என்று, எந்த நல்ல கொள்கை