பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54T கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 யையும் ஒதுக்கி விடுவார்கள்; அதனால் படி, பட்டம் பெறு, பிறகு உன் கொள்கை யைப்பேசு' என்று அறிவுறுத்தினார். அறிவுரை சரியென எனக்குத் தோன்றியது. அதனால் பொறையாறு என்னும் ஊருக்குச் சென்று தலைமறைவாகத் தங்கியிருந்து, வித்துவான் முடிக்காமல் அங்கு ஆசிரியர் பணி புரிந்து வந்த நாகராசன் என்ற நண்பருடன் சேர்ந்து, நாங்களே சமைத்துக் கொண்டு, படித்து வந்தோம். நான் அங்கிருப்பது எவருக்குமே தெரியாது. தஞ்சையில் தேர்வெழுதிவிட்டு, வீட்டிற்குச் செல்லாமல், சென்னைக்கு வந்து விட்டேன். அங்கு முருகு என்னும் இதழ் நடத்தி வந்த அறிவழகன் என்ற நண்பர் உதவியுடன் தங்கியிருந்தேன். பின்னர், டி.என். இராமன் நடத்தி வந்த குயில் இதழில் சேர்ந்தேன். அங்கேதான் தமிழ் ஒளி, கோ. சண்முக சுந்தரம், புத்தனேரி சுப்பிரமணியம் போன்ற வருடன் தொடர்பு ஏற்பட்டது. குயில் நிறுத்த வேண்டிய நிலை வந்ததும் கல்கி' யில் சேர்த்து விடுவதாக, இராமன் கூறினார். கொள்கை காரணமாக மறுத்து விட்டேன். பிராமனாள் சாப்பிடுமிடம் ஒரு நாள், திருவல்லிக்கேணியில் ஒர் உணவு விடுதிக்கு டி.என். இராமன் திருவாரூரைச் சேர்ந்த சிங்கராயர் நான் மூவரும் உண்ணச் சென்றோம். இராமன் சிவந்த மேனியர்; தோற்றப் பொலிவுடையவர். பார்வைக்குத் தஞ்சாவூர் ஐயர் போலவே இருப்பார். சிங்கராயர் சரியான கருப்பு. உண்மைத் திராவிடர். இலைபோடப்பட்டது. மூவரும் அமர்ந்தோம். பரிமாறுவோன் வந்தான். சிங்கராயரைப் பார்த்தான். அவரிடம் வந்து, சார், இங்கே பிராமணாளுக்கு மட்டுந்தான் சாப்பாடு; நீங்க ஏந்திரிச்சிடுங்கோ' என்றான். சிங்கராயர், தம் பெயருக்கு ஏற்ப மாறினார். ‘ஏண்டா, பாப்பாரப் பயலே! நாங்க கொடுக்கிறது காசில்லையோ? போடுடா சோத்தை; இல்லே பிச்சுப் போடுவேன் பிச்சு என்று முழக்கமிட்டார். விடுதி முதலாளி ஒடி வந்து சார்! சார் பொறுத்துக்கோங்க சார்; நீங்க உக்காருங்க சார் என்று கெஞ்சி, பரிமாறுவோனை அழைத்து, டேய், முதல்லே இவாளுக்குச் சாதத்தைப் போடுடாஎன்று கூறி அவரும் பரிமாறத் தொடங்கி விட்டார். உண்டு விட்டு வெளியில்