பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 55 வந்த இராமன், ஒய் சிங்க ராயரே, ஒழுங்கா எனக்குச் சோறு போட்டுக் கொண்டிருந்தான்; நீர் கலாட்டாப் பண்ணிக் கெடுத்து விட்டீர் என்று சிரித்துக் கொண்டார். அண்ணாவின் பெருந்தன்மை திராவிட நாட்டில் ஆலையூரார் உபதேசம் என்ற தலைப்பில் அண்ணா எழுதிய தொடர் கட்டுரைகளை, நூல் வடிவில் கொணர விரும்பிய இராமனுக்கு, அண்ணா இசைவு தந்திருந்தார். அக் கட்டுரைகளை வாங்கி வர, இராமன் மடலுடன் காஞ்சிக்குச் சென்றேன். திராவிட நாடு அலுவலகத்துள்நுழைந்தேன். ஒரறையில் இடப்பக்கம் ஒரு பலகையின் மேல் அகநானூற்றுச் சொற்பொழிவுகள், குறுந்தொகைச் சொற்பொழிவுகள் என்ற நூல்கள் விரித்த வண்ணம் வைக்கப்பட்டிருந்தன. சுருட்டி வைக்கப்பட்ட இலையுடன் உணவுச் சட்டி வலப்பக்கம் உறங்கிக் கொண்டிருந்தது. எதிரில் அண்ணா எழுதிக் கொண்டிருந்தார். எழுதி முடிக்கப்பட்ட தாள்கள் ஒவ்வொன்றாகச் சிதறிக்கிடந்தன. அண்ணா, சுவர்ப்பக்கமாகத் திரும்பி வெற்றுடம்புடன் தரையில் அமர்ந்து, துடையின் மேல் வைத்து, எழுதிக் கொண்டிருந்தார். என் காலடி ஓசை கேட்டுத் திரும்பிய அண்ணாவிடம் இராமன் மடலைக் கொடுத்தேன். முன் பக்கம் உட்காருங்கள்; இதோ வந்துவிடுகிறேன் என்று எழுதிக் கொண்டே சொன்னார். முன்பகுதிக்குச்சென்று சாய்வு நாற்காலியில் அமர்ந்த நான் சிறிது நேரத்திற்கண்ணயர்ந்து விட்டேன். விழித்துப் பார்க்கும் பொழுது, அருகில் இருந்தவர் கூறியது கேட்டுப் பதறிப் போனேன். அண்ணாவந்தவுடன் உங்களை எழுப்ப முயன்றேன். அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறார்அவரை எழுப்பாதே என்று அண்ணா சொல்லி விட்டு எழுதச் சென்று விட்டார் என்று கூறினார். நேர்ந்து விட்ட தவறுக்காக வருத்தப்பட்டுக் கொண்டு, அந்த அறைக்குச்சென்றேன். சிறிது நேரத்தில் என்னைப் பார்த்துவிட்டு அண்ணா. அங்குச் சிதறிக் கிடந்த நூல்கள், எழுதப்பட்ட தாள்கள். அப்படியே இருந்த உணவுச்சட்டி-அவற்றைச்சுட்டிக்காட்டி இ தோ பாருங்கள் மேதினமலருக்காக எழுதிக் கொண்டிருக்கிறேன்; நேரமே கிடைக்கவில்லை; திராவிடநாடு இதழ்களைத் தேடி எடுக்கவேண்டும்; பிறகு எடுத்து அனுப்பி வைக்கிறேன்; இராமனிடம் சொல்லுங்கள் என்று கூறினார். திரும்பி விட்டேன்.