பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 உங்கள் வேலைக்கு ஆபத்து வரும் போல் தோன்றியது; உங்கள் பாதுகாப்புக்காக இப்படி வெளியிட்டோம் என்றனர். வெல்க தமிழ்! வெல்கதமிழ்! எங்கள் பள்ளியின் நூற்றாண்டு விழா நடை பெற்றது. முதலமைச்சர் ஒமந்துார் இராமசாமி ரெட்டியாரும் கல்வியமைச்சர் அவினாசிலிங்கனாரும் வருகை தந்தனர். வட மொழியாசிரி யரின் திட்டப்படி, பள்ளிச்செயலரின்துணையுடன், வடமொழியில் கடவுள் வணக்கம் பாடப்பட்டது. கேட்டதும் நாங்கள் நெருப்பின் மேல் நிற்பது போன்ற உணர்வுடன் நின்றோம். பாடல் முடிந்ததோ இல்லையோ மாடியில் நின்ற மாணவர் அணி “வெல்க தமிழ்! வெல்க தமிழ் வெல்க தமிழ்!” என மும்முறை வெடி முழக்கம் செய்தனர். கல்வியமைச்சர் ஏறிட்டுப் பார்த்தார். மலர்ச்சி தவழ்ந்தது அவர் முகத்தில். எவரும் சொல்லித் தராமலேயே மாணவர் தாமே உணர்ச்சியால் உந்தப்பட்டு முழக்கமிட்டது, நூறுகுடம் குளிர்புனலை எங்கள் தலையில்வார்த்தது போன்றிருந்தது. பின்னர் முதலமைச்சர் பகவத்கீதை'யில் திளைத்தெழுந்து, அதன் பெருமைகளையெல்லாம் விளக்கினார். எம் நெஞ்சில் பெரும் பாறையை ஏற்றி வைத்தது போல் இருந்தது. அடுத்து, கல்வியமைச்சர் திருக்குறளின் அருமை பெருமைகளை விளக்க மாகப் பேசி மகிழ்ந்தார். எம் நெஞ்சில் ஏற்றி வைக்கப்பட்ட பாறை அகற்றப் பட்டது போன்றவுணர்வு பெற்றோம். இந்த நாட்டுக்கு - இந்த நாட்டு மக்களுக்கு எது தேவையோ? அதைப் பேசினார் கல்விய மைச்சர். எங்கள் தாத்தா தமிழ் நெறிக் காவலர் மயிலை சிவ.முத்து அவர்கள் இல்லம் (மாணவர் மன்றம்), விடுதலை அலுவலகம், கடற்கரை இம் மூன்றிடங்களில்தான், பள்ளிநேரம் போக ஏனைய நேரங்களில் எங்களைக் காணலாம். தமிழ் நெறிக் காவலரை ஐயா என்றுதான் அனைவரும் அழைப்பர். நான் உரிமையுடன் அவரைத்தாத்தா என்றழைத்தேன். அன்று முதல் அதே பெயர் நிலைத்துவிட்டது. தொண்டு என்றால் என்ன? என ஒருவர் கேட்டால் தாத்தாவைக் காட்டினாற் போதும்; அப்படித் தொண்டாற்றுவார்? வாழ்நாட் பணியே அதுதான்.