பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 65. அவர் தம் உறவினர் ஒருவர், இரத்தின முதலித்தெருவிலுள்ள அவரில்லத்தில் இறந்துவிட்டார். பள்ளியிலிருந்த எனக்குத் தாத்தா உடனே செய்தி விடுத்தார். பள்ளி முடிந்தபின் மாலையில் அழகு வேலனிடம் கூறினேன். இருவரும் தாத்தா வீட்டிற்குச் சென்றோம். காலையிலேயே ஏன் வரவில்லையென்று அழகு வேலனைத்தாத்தா கடுமையாகக் கண்டித்தார். எனக்கு இப்பொழுதுதான் முடியரசன் சொன்னார். உடனே வந்து விட்டேன்' என்றார். தாத்தா என்னை நோக்க ஏன் உடனே வரவேண்டாமா? என்று நான் நடுங்கும் படியாக உரத்துப் பேசினார். சீற்றத்தின் எல்லையில் நின்று பேசிய அவர் சிறிது தணிந்து, என்னைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே 'என்ன! அஞ்சி விட்டீர்களா? இன்னுங் குழந்தை மாதிரியிருக் கிறிர்களே? இதெல்லாந் தெரிந்து கொள்ள வேண்டும். மனத்தில் உங்களுக்குப் பட வேண்டுமென்பதற்காகத்தான் சும்மா கோபமாகப் பேசினேன். வருத்தப்படவேண்டாம் என்று அணைத்துக் கொண்டார். அடிக்கடி பேராசிரியர் பலரைக் காணவேண்டி என்னையும் அழைத்துச் செல்வது வழக்கம். ஒரு நாள் புறப்பட்டோம். வார இதழ்கள் அடைத்து வைக்கப்பட்ட பையொன்று கையில் தொங்கும்; பணப்பையும் அதனுள் இருக்கும்; ஊன்றாக் கோலொன்றும் கையில் தொங்கும். இக்கோலத்துடன் புறப்பட்டார். தாத்தா! முகம் வழித்துக் கொள்ளவில்லையா? என்றேன். ஏன்?" என்றார். பெரியவர்களைப் பார்க்கச் செல்வதால் வழித்துக் கொள்ளலாமே என்றேன். அவ்வளவுதான்; எவன் பெரியவன்; அவனுக்காக நான் முகம் வழித்துக் கொள்ள வேண்டுமோ? அப்படி அவனைப் பார்க்கத் தேவையில்லை என்று கூறிச் சினத்தராகிப் பையை ஒரு பக்கம் எறிந்தார்; கோல் ஒரு பக்கம் பறந்தது; துண்டு விசி யெறியப்பட்டது. எனக்குக் கைகால்கள் நடுங்கி விட்டன. அறையை விட்டு வெளியில் வந்தேன். அவர் தமக்கையார், 'ஏம்ப்பா இதெல்லாம் அவர்கிட்டே சொல்றே; அவர் குளிக்க மாட்டார்; போட்ட சட்டையைக் கழற்ற மாட்டார்; முகம் வழித்துக் கொள்ள மாட்டார். நாங்களே நேரம் பார்த்துத்தான் சொல்லுவோம்? என்று எனக்கு அறிவுரை கூறினார். சரி! நாளைக்குப் போவோம்; நாளை வாருங்கள் என்று சொல்லி விடை கொடுத்தார். மறுநாள் சென்றேன். முகம் வழித்துக் கொண்டு