பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கவியரசர் முடியரசன் படைப்புகள் -10 சட்டையையும் மாற்றிக் கொண்டு, அமர்ந்திருந்தார். முடியரசன்! இப்பொழுது சரிதானே? நீங்கள் சின்ன வயதுப் பிள்ளை; நான் கிழவன்தானே! எனக்குத் தெரியவில்லை என்று என் தோளை அனைத்தவாறு புறப்பட்டார். அன்று முதல், எங்காவது புறப்படுமுன், 'என்ன முடியரசன்! இந்தச் சட்டை போதுமா?’ என்று கேட்டுக் கொள்வார். எனக்காகவே ஒழுங்காக முகம் வழித்துக் கொள்வார். எனக்குத் திருமணமான மறு கிழமையே சென்னைக்கு வந்து பணியில் ஈடுபட்டு விட்டேன். பள்ளிக்கு ஒன்பது நாள் விடுமுறை வந்தது. தாத்தா வீட்டிற்குச் சென்றேன். விடுமுறைக்கு ஊருக்குச் செல் வில்லையா? என்று வினவ, இல்லை என்றேன். உங்கள் ஊருக்குச் செல்ல எவ்வளவு கட்டணம்? என்றார். ஒன்பது உரூவா என்றேன். உடனே இருபது உரூவா எடுத்து என் பையில் திணித்து, 'ஒரு வாரமாவது வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு வாருங்கள்; இன்றிரவே புறப்படுங்கள் என்று பணித்தார். ஊருக்குச் சென்று வந்த பின்புதான், என் பிரிவுத்துயரை மாற்றுதற்கு இவ்வாறு செய்துள்ளார் எனத் தெரிந்து கொண்டேன். தந்தை பெரியார், தமிழ்ப் பெரியார் திரு.வி.க போன்றவர் களுடன் தாத்தா நெருக்கமான நட்புடையவர்; திரு.வி.க. வாழ்க்கை வரலாற்றில்குறிக்கப் பெற்றவர். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெருந்தொண்டு செய்தவர்; இவர் தமக்கையார் மலர்முகத்தம் மையார் போராட்டத்திற் சிறை சென்றவர். அண்ணாவால் நன்கு மதிக்கப்பட்டவர். பல குடும்பங்களுக்குப் பல்லாற்றாலும் உதவியவர். இவர் தொடர்பு நான் பெற்ற டேறுகளுள் ஒன்று. நான் சென்னையில் வாழ்ந்த இரண்டாண்டும் என்பாற் பேரன்பு செலுத்தி வளர்த்தவர். அண்ணன் அழகுவேலன் தில்லை. தா.அழகுவேலன் எளிதில் உணர்ச்சி வயப்படுபவர்; எடுத்த எடுப்பில் சினம் வந்துவிடும். எதையும் துணிந்து செய்து விடுவார் எந்நேரமும் மடியில் கத்தி இருக்கும். நான் சற்று அமைதி யானவன். 'முடியரசன்: நீங்கள் எப்பொழுதும் அழகு வேலனுடன் இருக்க வேண்டும் அவர் நெருப்பு: நீங்கள் நீர் என்று தாத்தா அடிக்கடி கூறுவதுண்டு. நான் அவரை அண்ணன் என்றே அழைப் பேன். அண்ணியும் அன்பும் அமைதியும் நிறைந்தவர். வீட்டில் இடியப்பம் செய்து விட்டால் ஆனைக்கவுணி என்ற இடத்திலிருந்து