பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[70] கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 அம்மையார் (குத்துசி குருசாமியின் துணைவியார்) இருவரும் கூட்டத்திற் கலந்து கொண்டனர். உணர்ச்சி கொந்தளிக்கும் மக்கள் கூட்டம் கடல் போலத்திரண்டது. திரு. வி. க. பேசத் தொடங்கினார். காவல் துறை ஆணையர் (போலீஸ் கமிஷனர்) கூட்டத்திற்குத் தடைவிதித்த ஆணையைத் தலைவரிடம் கொடுத்தார். தலைவர் ஆணையை வாங்கிப்பாாத்து விட்டு, தடை வரும் என அறிவேன்; மாலை நான்கு மணி வரை எதிர்பார்த்தேன்; வாராமையால் அதன் பின்னரே நான் இங்கு வந்தேன்; கூட்டத்தைப் பாருங்கள்; பொங்கியெழும் உணர்ச்சியைப் பாருங்கள்; இப்பொழுது தடையாணை தரின் எவ்வாறு நிறுத்த இயலும்? விளைவு வேறாகிவிடும்?' என்றார். 'ஐயா, தங்கள் வீடு எனக்குத் தெரியாது தேடியலைந்து விட்டுத்தான் இங்கு வந்தேன், தயவு செய்து கூட்டத்தை நிறுத்தி விடுங்கள்' என்று ஆணையர் கெஞ்சினார். 'என் வீடா தெரிய வில்லை?” என்று நகைத்துத் கொண்டார் தலைவர். அன்பழகனும் குஞ்சிதம் அம்மையாரும் கூட்டத்தை நடத்தியே ஆக வேண்டும்' நம்மை வேண்டு மானால் சிறை செய்யட்டும் என்று தலைவரிடம் மன்றாடினர். தலைவர் அவர்களுக்கு அமைதி கூறிவிட்டு, ஆணையரை நோக்கி, ஐயா, இவ்வளவு பெருங்கூட்டத்தைத் திடீரென்று கலைத்தால் குழப்பம் நேர்ந்து விடும். அதனால் நான் அவர்களுக்கு விளக்கம் கூறித்தான் கூட்டத்தை நிறுத்தஇயலும்; விரும்பினால் என்னைப் பேச விடுங்கள்; இல்லையென்றால் எங்களைச் சிறை செய்யுங்கள் என்றார். ஆணையர் சூழ்நிலையைப் பார்த்துவிட்டு, வேறு வழியின்றி, இசைந்தார். தலைவர் பேசத் தொடங்கியதும் கூட்டத்தில் ஒரே அமைதி. அரசை எவ்வளவு கண்டிக்க முடியுமோ அவ்வளவு கண்டித்துப் பேசிவிட்டு, பெரியார் ஈ.வே.ரா. வன்முறை விரும்பார். சட்டத்தை மதிக்கும் இயல்பினர். அவரை நீங்கள் மதிப்பது, அவர்தம் சொல்லுக்குக் கட்டுப்படுவது உண்மையெனில் அமைதி யாகக் கலைந்து செல்க' என உருக்கமுடன் கேட்டுக் கொண்டார். தமிழ்ப் பெரியார் ஆணைக்குக்கட்டுப்பட்டு, மக்கள் வெள்ளம் அமைதியாகக் கலைந்து நெடுஞ்சாலையை அடைந்தது, கூட்டம்