பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 7П நிறுத்தப்பட்டதால் ஆணையருக்கு மகிழ்ச்சி; அரசுக்குக்கண்டனத்தைத் தெரிவித்து விட்டமையால் எங்களுக்கு மகிழ்ச்சி. கூட்டம் சாலையிற் செல்லும் பொழுது, அவ்வழியிற் சென்ற - பாரத தேவி என்னும் செய்தித் தாள்களையேற்றி வந்த உந்துவண்டியின் மேல் மக்கள்தம் உணர்ச்சியைக் காட்டி விட்டனர். "இந்து' இதழ் அலுவலகத்தின் மேலும் உணர்ச்சி வெள்ளம் பாய்ந்தது. பொதுக்குழு கூண்டோடு சிறை செய்யப்பட்டதைக் கண்டித்து பாடல் எழுதித்தர வேண்டும் என்று இளஞ் செழியன் வேண்டினார். உணர்ச்சிப் பாடல்கள் எழுதித் தந்தேன். போர்வாள்' இதழில் ஆசிரியவுரைக்குப் பதிலாக என் பாடல்கள் அச்சேறின. ஆனால் மறுநாளே பொதுக்குழு விடுதலை செய்யப் பெற்றமையால் பாடல்கள் எடுக்கப்பட்டு, வெற்றிடமாக அப்பகுதி வெளி வந்தது. இதழ்களின் தொடர்பு சென்னையிலிருக்கும் பொழுதுதான், நிலவு பற்றிய என் பாடல் 'பொன்னி'யிதழில் 'பாரதிதாசன் பரம்பரை என்ற பகுதியில் வெளிவந்தது. பொன்னியில் தொடர்ந்து எழுதி வந்தேன். அதனால் 'பொன்னியின் செல்வன்' என்று சிலர் என்னைக் குறிப்பிடுவர். பொன்னியில் வந்த பாடல்களால், என்பால் ஈடுபாடு கொண்ட சுவைஞர் பலரை இன்றும் நான் காண்கிறேன். திருவையாறு அரசர் கல்லூரிக்குப் பன்மொழிப்புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரும் சின்ன அண்ணாமலை என்பவரும் சென்றிருந்த பொழுது தற்செயலாக நிகழ்ந்த நிகழ்ச்சி, சுயமரியாதை மாணவர்களால் நிகழ்ந்ததென்று கருதி, கல்லூரியை மூடிவிட வேண்டும் என்ற கருத்தில் மூடித் தொலையுங்கள்’ என்னும் ஆசிரியவுரை (தலையங்கம்) வெள்ளி மணி என்னும் இதழில் எழுதப்பட்டிருந்தது. நான் தொடர்பு கொண்டிருந்த அழகு" என்னும் இதழில், உங்கள் திருவாயை மூடுங்கள் என்னுங் கருத்தில் "மூடித் தொலையுங்கள் என்று அதே தலைப்பில் ஆசிரியவுரை எழுதினேன். பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம், பேராசிரியர் அன்பு கணபதி முதலான பெருமக்கள் நேரிற் பாராட்டுரைத்தனர். 'முருகு' என்னும் இதழில் அழிந்து விடுமோ?’ என்ற தலைப்பில் ஒரு கற்பனைக் கதையெழுதினேன். அது முழுக்க முழுக்கப் பாரதிதாசன் புராணப்படங்களுக்குப் பாடல், கதை எழுதுவதைக்