பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 கண்டிக்கும் வகையில் அமைந்தது. ஆனால் அவரை வெறுத்து எழுதவில்லை, அவர் போக்கை மாற்றிக் கொள்ளும் வகையில் எழுதினேன். அக்கதையில் பாரதிதாசனையே மறுத்து எழுதிய என் துணிவு, பலராலும் பாராட்டப்பட்டது. சென்னையில் இருக்கும் போது பல்வேறு இதழ்களில் கதை, கவிதைகள் எழுதினேன். 'பிரசன்ட விகடன் இதழில் துணையாசிரியராக இருந்த அ.இளங் கோவன் என் நெருங்கிய நண்பரானார். நல்ல பண்பாளார்; படிப்பறிவு மிகுந்தவர். ஒழுக்க மிக்கவர். மாக்சிம் கார்க்கி யெழுதிய 'அன்னையென்ற புதினத்தைக் கொடுத்தார். அதை இருமுறை படித்தேன். அந்நூல் என் உள்ளுணர்ச்சியைத் துண்டி விட்டது. அவ்வுணர்ச்சி எக்கோவின் காதல்’ என்ற கதையாக உருவெடுத்துப் பிரசண்ட விகடனில்உலா வந்தது. புலவர் வாரம் நான் சென்னையிற் பணிபுரியுங்காலத்து, அரசியற் கூட்டமோ இலக்கியக் கூட்டமோ அது எங்கு நடந்தாலும் சென்று செவிச் செல்வம் பெற்று வருவேன். ஒரு சமயம் புலவர் வாரம் கொண் டாடப்பட்டது. சில நாள் அங்குச் சென்று கேட்டவற்றை நாள் குறிப்பில் குறித்து வைத்துள்ளேன். அன்று சான்றோர் சிலர் பேசியவற்றின் குறிப்புகளை அப்படியே ஈண்டுத் தருகின்றேன். 1948ஆம் ஆண்டு சனவரி 28ஆம் நாள் தொடங்கிப் புலவர் வாரங் கொண்டாடப்பட்டது. அந்த ஒரே ஆண்டுதான் நானும் நாள் குறிப்பு எழுதி வைத்துள்ளேன். அதுவும் அரைகுறையாக. தொடர்ந்து ஆண்டுதோறும் எழுதியிருப்பின் பல செய்திகள் இன்று தெரிந்திருக்கும். இயல்பாக என்பாலமைந்த சோம்பலால் அதனைச் செய்யாது விடுத்தேன். புலவர் விழா, தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் உயர்நிலைப் பள்ளியில், நக்கீரர் கழகத்தாரால் நடத்தப் பட்டது. துரைக்கண்ணுமுதலியாரவர்கள்தலைமையேற்றார்கள். பேராசிரியர் துரை. அரங்கனார், கோ.வடிவேலுச் செட்டியாரைப் பற்றிப் பேசினார். அப் பேச்சின் சுருக்கம். “செட்டியார் மளிகைக் கடை வைத்திருந்தார். இவர் தமது 27ஆம் அகவையில்தான் கல்வி கற்கத் தொடங்கினார். எளிமை