இளம்பெருவழுதி நாகனார் பாண்டியன் செம்புலச் பாண்டியன் வெல்போர்க் கடம்பனை விடுத்தனம்; அவன்றான் வென்றான் போல வீறுறு களிப்பிற் சென்றான் செய்தான் குன்றா வகையில், அருகமர் தேவி, அரும்பெறற் செல்வன் செருவில் வென்ற செய்தி கேட்டலும் அன்றலர் நறுமலர் அழகினை வென்று நின்று திகழ்ந்து நிவந்த திவள்முகம், பண்டமர்க் களத்துப் பயின்றறி யாகிவன் கொண்டனன் வென்றி எனுமொழி கூறலும் வெண்டலை யறைவேன் வீறுற்றெழுந்தேன் முதுமை மறந்தேன் முத்தமிழ்ப் பாடினேன். கன்னிப் போரில் கண்டனன் வெற்றி என்னலுங் கடம்பன் பின்னவள் கொவ்வை இதழில் நகையும் இருவிழிப் புனலும் பொதுளக் காண்கினும் பூவெழில் முகத்தில் தவழும் ஒளியிலை தனிமையள் போலக் கவலை தோயக் கரணியம் என்கொல்? சிறியோள் அவள்தான் செய்வகை தெரியாது வறிதே கலங்கினன் அறியா துளத்துள்: நிவந்தெழு திருமண நினைவினற் போலும், அவரவர் மனத்தை அளந்து விளம்பினிர் நும்முளக் களிப்பை நுவல்வோர் யாருளர்? செம்புலப் புலவர்தாம் செப்புதல் வேண்டும்: அனைவரும் மகிழ அதன்பின் எஞ்சியது தினையள வெனினும் பனையள வாக்கிக் கொள்ளும் எமதுளம்:கூரியீர் நும்முகம் உள்ளோர் ஈங்குக் கொள்ளும் மகிழ்வின் வேறாக் காணல் வியப்புடைத் தாகும். நேரா வொன்று நேர்ந்தது போலவும் புதுமை கண்டாற் போலவும் மகிழ்வீர் எதுகண் டிவ்வணம் எக்களிப் புற்றீர்? 28. I
பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/111
Appearance