பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 விறல்வேள் : (சற்றே சினந்து) -- இடைமறித்தும்மிடை இயம்புதல் பொறுக்க படையில் தலைவன் பகையெமக் கெனினும் நல்லோன் அவன்றான் நாட்டுணர் வுடையோன் பொல்லா மொழிகள் புகுத்தேல் அவன்பால்; செம்புலச் : நன்று நன்று நம்மவன் தொழிலும் கொண்டநின் றொழிலும் ஒன்றே யாகலின் இழுக்கவற் கணுகா தியம்புதி தலைவ: விறல்வேள் : வழுக்கியும் அம்மொழி வாயாற் புகலேல் மணப்பேச் சன்றி மற்றொன் றறியான் குணத்தின் உயர்ந்தான் கூறிய இவைதாம்; "அன்னை யில்லாள் அத்தன் இல்லாள் என்னுயிரனையாள் பின்னவ ளாதலின் அவள்விழை வெதுவோ அஃதென் விழைவு திவலையும் மாறுறச் செய்யேன் உறுதி: நெஞ்சுள் ஒருவனை நினைந்தன ளாதலின் வஞ்சி யறியா வகையிற் பேசுதும் பிஞ்சு மனத்தள் பேதுறும் அறியின்’ என்றவன் தனிமையில் இயம்பிய தன்றி ஒன்றும் அறியான் உயர்மதி யமைச்சே பன்முறை முயன்றோம் பல்வகை முயன்றோம் தன்பிடி விடாது தடுத்தே மொழிந்தனன்; செம்புலச் : தந்தவன் அவனலன்: ச்ாற்றுதல் வாய்மையேல் மந்தணம் எவ்வணம் வந்ததும் நூம்பால்? விறல்வேள் : அந்தணர் தந்தனர் . . பாண்டியன் : . . ஆஆ. அவரா? விறல்வேள் : அம்மறை முழுதும் அவரே தந்தனர் நம்பிய கணியன் நம்பியே தந்தனர்; செம்புலச் : அணிதிகழ் வயல்சூழ் கணிய மங்கலம் அண்மையில் நூம்நாட் டரும்பிய தென்கொல்?