பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 ஒன்னலர் மறைத்தனர். உறங்கினர் தமிழர். மூவருள் ஒருவன்நின் முன்னோன் இவன்றான் காவிரி நாட்டுக் கோருலங் கிள்ளி: இளைஞன் : புனையா ஒவியப் பொற்புடைச் செல்வி அனையாள் யாவள்? அரசி போல்வாள் துறவி போலத் தோற்றமேன் கொண்டனள்? முதியவர் : பெறலருஞ் செல்வப் பேற்றினள். இவள்தான் குறைவறு கற்பின் கோமகள்: தமிழ்மகள் அறநெறி பிறழா நிறைமனச் செல்வி இளைஞன் : பாண்டவர் ஐவர்தம் பத்தினி யோஇவள்? (முதியவர் தம்முள் நகைக்க) ஈண்டென் வினாவிற் கேன்நகை செய்தீர்? முதியவர் : நன்கு வினவினை; நகையெழா தென்செயும்? தென்புலக் கற்பின் திறமொருங் குணர்த்த வடபுலப் பெண்ணோ வாய்த்தனள்? எனநின் மடமையை யெண்ணி மனத்துள் நகைத்தேன்; கோதறி யாமகள் மாதவி இவள்பேர்! இளைஞன் மாதவி யாவிலை ഥകണങ് ளன்றோ? كما முதியவர் : கலைமகள் பிறப்பால் விலைமகள் எனினும் விலையிலாக் கற்பின் குலமகள் கொழுநன் கோவலன் இறந்ததால் கோதை யவளோ யாவுந் துறந்தனள், அரும்பெறல் மகட்குந் துறவு தந்துபார் தொழும்நிலை தந்தனள், அறநெறி வழுவா அன்னை யிவளும் ஐவர் இருந்தும் ஆறாம் ஒருவனை விழைந்த அவளும் வேறுவே றியல்பினர்; இளைஞன் : பற்பல உண்மைகள் பயனுள பெற்றேன் கற்பன கற்பேன் காப்பன காப்பேன்;