பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெரு வழுதி முதியவர் ஈங்கிவள் புலமையால் ஏற்றம் பெற்றவள் ஓங்கிய வேந்தரும் உயர்த்தும் அரிவை கற்றவர் மெச்சிங் காக்கை பாடினி 【所 நச்செள்ளை எனப்பெயர் நவிலப் பெறுவள் இளைஞன் கற்றுத் தேறிய நற்புலங் கொண்டோர் பொற்றொடி மகளிர் அற்றைநாள் உண்டுகொல்? முதியவர் : அறத்துறு கல்வியில் ஆன்றவ ரன்றி மறக்குடி மகளிரும் வாழ்ந்தனர் அந்நாள்: பின்கொடா ஒருவனை வெந்கொடுத் தானென நன்கனம் அறியார் நவின்றன ராக ‘மண்டமர்க் குடைந்தான் மகனவன் ஆகின் உண்ட முலையறுத் தொழுகுவென் எனச்சினை.இ அடுகளந் துழவுவோள் படுமகன் மார்பில் விடுகணை துளைப்ப வீழ்ந்து சிதைந்து கிடந்தது கண்டு கிளர்ந்தெழும் உணர்வால் ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தாடிய நான்ற தசையினள் நரைமூ தாட்டி சிலையிது காணுதி. . . . ..... 畢 ■ 畢 睡 睡 陣 ■ ■ ■ ■ சிந்தனைப் பெரியீர் இளைஞன் மறக்குடிப் பிறந்த மகளிர்கொள் மானமும் பிறக்கும் நாட்டிற் பேணிய மற்றும் செவிப்புலம் புக்குச் சிந்தையுள் நின்றன: தனிக்குமென் னாட்டின் தனிப்புக ழோங்க நரம்பெலாம் உணர்ச்சி உரங்கொண்டேறின. முதியவர் : நரம்புகள் உலறி நரைமுதிர் திரையுடல் உடையே னாகினும் உணர்ச்சியுள் ளெழலாற் படையேன் போலப் பாய்புலி நெஞ்சம் பெற்றேன் எனில்நீ கட்டிளங் காளை உற்ற வுணர்வினை உரைக்கவும் ஒல்லுமோ? பெற்றஇவ் வுணர்வாற் பேணுக தாயகம்: வெந் - முதுகு 183