உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோட்புலி வழுதி கோட்புலி வழுதி காட்சி 3 நிறைமணற் பரப்பில் நெடும்புகழ்க் கோட்புலி மறவன் பயிற்று வகைவகைப் போர்முறை நறைபொழி சோலை நாப்பண் வழுதி மருளறப் பயின்றனன் மாலைப் பொழுதே O O. O. O. வலத்தோர் நாண்தொட வளைவிற் பகழி இலக்கிற் பிழையா தெய்யுந் திறனும், நண்ணார் அகலத்து நாப்பண் தைக்கும் வெண்மான் எஃகில் வேலெறி முறையும், வட்கார் நெருங்கா வாய்வ்ாள் சுழற்றி உட்குவர எறிந்தமர் உடற்றுங் கலையும், தொடுக்குங் களத்துத் தொடுபடை யனைத்தும் தடுத்துக் கெடுத்துக் கடக்குங் கூறும், எளிதிற் கைவர இன்றுநீ பயின்றனை உளபிற நாளை உணர்த்துவென் மைந்த எழுகடல் வரைப்பில் இணையில் வலியைநின் பழுநிய திறனும் பயிற்றிய முறையும் எளியேன் தெளிவுற ஏற்றுளேன் கொல்லோ? இளையாய் போர்த்திறன் இயல்பா னமைந்தும் அணியாய் போல அடங்கினை யன்ப முற்றுக நின்புகழ் முந்நீருலகில் பொருளகத் தெவ்வெப் போர்முறை நிகழ்த்துவர்?