பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 செம்புலச் நாகனார் கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 அஞ்சாக் கடம்பன் அணிமனை நோக்கிப் பல்கால் வரலும் பல்பொழு தாங்கண் அல்கிச் செல்லும் அவிழா ஒலியொடு. மொழிதலும் உண்டென மொழிந்துளன் குழலி, அழிசெயல் சூழ்ந்திவன் ஆற்றவுங் கூடும் எனுமோர் ஐயம் எழுந்ததென் மனத்துள்; இளவல் வழுதிக் கிகலோர் நாப்பண் பிழைகள் வருமெனப் பேதுற் றெண்ணி வெல்போர்க் கடம்பன் செல்கவென் றுரைத்தேன்; செல்வோன் ஆங்கட் சிறுமை புரியின் பெரும்பழி வருமெனப் பெரிதும் அஞ்சுவன் வருபகை முருக்கி வாகை கொள்ளுவன் எனயர்ன் நினைந்தே இளவலைத் தடுத்தேன்; முனமுணர்த் தொருசொல் முந்துற வெண்ணிக் கடமை பிழையாக் கடம்பனென் றவற்கோர் அடைமொழி தந்ததும் அப்பொருட் டாகும்; புலவர் பெரும பொறுத்தருள் புரிக சலமிகு செயலனென் றையுறல் தவறு: கடம்பன் அத்தகு கயவனென் றுள்ள உடம்படா தென்மனம் ஒள்வேல் மன்னர்க்கா இடும்பை வரினும் ஏற்கும் இயல்பினன்; தாயகப் பற்றிற் ற்ளராப் பிடியன்: தீய நினைவிற் பாயுமோ அவனுளம்? நல்லவர் பண்பர் நடுவர் என்போர் பொல்லா ராகும் பொழுதும் உண்டு: பேரவாப் பேயின் பேழ்வாய்ப் பட்டோர் ந்ேரவாம் மனத்தின் நீப்பர் வேர்ப்பர் கரைப்பார் உரைப்பிற் பொருப்பு உருகும்: ஆட்டு வித்தால் ஆடா ருளரோ கேட்டு மனத்தர் கூட்டாற் கடம்பன் விரிமனம் அதுவுந் திரிதரும் அன்றோ? பிரையுறு தீம்பால் திரிதல் இயல்பே.