உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி செம்புலச் நாகனார் செம்புலச் பாண்டியன் செம்பு லச் ஒற்றர் தருஞ்சொல் உண்மை யாகலின் மற்றவர் செயலினில் மாசிலை ஐய: ஐயம் எனயான் அறைகுவதன்றி மெய்யென நிறுவ விழைந்திலேன் அமைச்ச மாசிலல் எனிலென் மனமகிழ் வுறுஉம்: ஆசில னாகுக அஃதென் னாவல்: உளவு பகைஞர்க் குரைப்போ னொருவன் உளனெனல் முற்றும் உண்மை எனினும் கடம்பன் அவனலன் கடமை புரிய உடம்படுவோனை ஒற்றின் ஆய்ந்து விரைவிற் கூறுவென் விலங்குடைக் கையனாய்ச் சிறையுட் படுவன் சின்னாட் பொறுமின் மெல்லியற் குழலி சொல்லிய பாடலில் நல்லன யாவும் நல்லன வல்ல என்னுந் தொடரில் மன்னும் பொருடான் உன்னி யுன்னி உணரற் பாற்று: யாவரே யாகினும் ஆகுக'. இனிநம் பாவலர் ஐயம் படரா திருக்கச் செல்செல் லிடந்தொறும் செவியுங் கண்ணும் பல்பல் வகையாற் பயன்படல் வேண்டும்: கல்லோடு மண்ணும் கட்டிய சுவரும் புல்லுக புல்லுக புரையறு செவியே. வேற்றவர் அறியா வேறுவே றுருவில் மாற்றமுஞ் சூழ்ச்சியும் மறைந்தறி ஒற்றர் ஒவ்வார் மனத்துள் உன்னுங் குறிப்பும் நன்னர் அறிவாரை நாற்புறத் தமைத்துளென்: கால்புகா விடத்தும் அவர்தங் கால்புகும் வேல்புகா விடத்தும் அவர்தம் விழிபுகும். கடிமனை யகத்துக் கரந்துரை யாடினும் கடிதிற் சென்றவர் காதுப் புகூஉம்: மாற்றலர் தேஎத்து மறையும் அறிவான் மாற்றுருக் கொளுமேல் மனையும் அறியாள்: 257