பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 கவியரசர் முடியரசன் படைப்புகள்-8 பாண்டியன் வஞ்சியான் எனநாம் மனத்துள் நினைந்தனம் வஞ்சியான் அவனோ வஞ்சம் செய்தனன் மலையான் எனநாம் மகிழ்ந்தனம் மேலை மலையான் நம்மொடு மலைய வந்துளன்: சிலையான் நம்கைச் சிலைவலி யறியாச் சிலையனோ நம்மொடு சினங்கொண் டெழுவது? சிலம்பாறு கொள்ளச் சிலம்பன் எழுமேல் இலம்பா டுடைத்தோ எம்தோள் வலிமை? செம்புலச் ; அடுபோ றின்றி நெடுநாள் உறையும் கொடுவாள் உரைகழித் தோச்சும் ஒருநாள் தொடுத லிலாது தூசுறும் வேல்கள் கொடுநுனி சிதையுங் கோலத் திருநாள் வாங்குதல் அறியாது தூங்கும் வில்லும் ஏங்கு தூ னியும் இணையும் நன்னாள் வந்தது வேந்தே ... பாண்டியன் : . . வருக வருக நாகனார் முழங்கால், புறவடி மழுங்கித் தேயக் குழந்தைப் பருவத்துக் குலவிய திம்மண், அன்னை யூட்டும் அமிழ்தினும் மேலெனத் தின்ன விழைந்த திருமண் ஈது. நடந்துந் திரிந்தும் ஆடியும் ஒடியும் படர்ந்து வளர்ந்து பழகிய மண்ணிது: வாழ்வின் கூறுகள் வகைவகை நுகர்நது மாள்வதும் இம்மண் மாற்றார் கொளவோ? பாண்டியன் கொளவிடோம் கொளவிடோம் உளமுடை யாதீர் தாய்க்கொரு பழிவரத் தரியோம் தரியோம் வேய்க்குலம் எம்முளத்துச் சினத்தீ மூட்டியோர் தீக்கிரை யாதல் திண்ணம் திண்ணம். பூழி நாடெனப் புகலும் அதற்குப் பூழிக் காடெனப் பொருத்துவம் பெயரே. -அஆஅ