பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சேர்க்கை - 3திருவைகாவூர்க் கல்வெட்டு

(1) ஸ்வஸ்திஸ்ரீ

புகழ்மாது விளங்க ஜெயமாதுவிரும்ப
நாமகள் நிலவ மலர்மகள் புணர
உரிமையிற்சிறந்த மணிமுடிசூடி
மீனவர்நிலைகெட வில்லவர்குலை(2)தர
ஏனைமன்னவர் இரியலுற்றிழிதரத்
திக்கனைத்துந்தன் சக்கரநடாத்தி

வீரசிங்காசனத்து அவனிமுழுதுடையாளோடும் வீற்றிருந் தருளிய கோவிராஜ (3) கேசரிவர்மரான திரிபுவன சக்கர வர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு நாற்பதாவது ராஜராஜ வளநாட்டுப்பாவை சுற்றுப்பூண்டி (4) பூண்டி உடையார் சூரியன் பவழக்குன்றினாரான வன நாடுடையார் உலகுய்யவந்த சோழவள நாட்டு அண்டாட்டுக் கூற்றத்து உடையார் திருவைகாவுடை (5)ய மகாதேவர் கோயில் முன்பு இஷ்டிகையாய் ஜீரணித்தமையில் இக்கோயில் இழிச்சித்திருக்கற்றளியாகச் செய்கைக்கு யாண்டு முப்பத் திரண்டாவ (6)து விண்ணப்பஞ்செய்து இஷ்டிகை இழிச்சி வித்துத் திருக்கற்றளியும் திருவிடைக்கட்டும் திருமண்டப மும் செய்வித்து இத்தேவர் பழந்தேவதானமான (7) நிலத்து நெல்லு திருப்படிமாற்றுக்கும் நிபந்தத்திற்கும் போதாமையில் தேவதானம் பெறுகைக்கு விண்ணப்பஞ் செய்து உலகுய்ய