பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோழரும் சளுக்கியரும்

15

காஞ்சிமா நகரையும் மாமல்லபுரத்தையும் தலைநகரங்களாகக்கொண்டு ஆட்சிபுரியத் தொடங்கினர். இவர்களது ஆளுகையும் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதிவரையில் சோழ மண்டலத்தில் நிலைபெற்றிருந்தது.

பல்லவரது ஆட்சிக்காலத்தில் சோழரின் வழியினர் குறுநில மன்னராகி அன்னோர்க்குத் திறை செலுத்தி வந்தனர். கி. பி. 819-ல் விசயாலயன் என்ற சோழ மன்னன் ஒருவன் பல்லவர்களோடு போர்புரிந்த சோழ மண்டலத்தின் ஒரு பகுதியைப்பற்றிக்கொண்டு தஞ்சாவூரில் வீற்றிருந்து முடிமன்னனாக அதனை அரசாளத் தொடங்கினான்.[1] இவனையே தொண்ணூற்றாறு புண்கள் மார்பிலே கொண்ட வீரன் என்று தமிழ் நூல்கள் புகழ்ந்து கூறுகின்றன என்பர். இவன் காலத்தேதான் தஞ்சாவூர் சோழமண்டலத்திற்குத் தலைமை நகரமாயிற்று. இவனது புதல்வன் முதலாம் ஆதித்த சோழன் எனப்படுவான். இவன் தன் நண்பனாகிய பல்லவ மன்னனைத் துணையாகக்கொண்டு பாண்டியனோடு பலவிடங்களில் பெரும்போர்கள் புரிந்தனன். இறுதியில் கி. பி. 880-ஆம் ஆண்டிற் கணித்தாகத் திருப்புறம்பயத்தில் நிகழ்ந்தபோரில் பாண்டியன் முற்றிலும் தோல்வியுறவே ஆதித்தன் வெற்றியெய்தினன். இப்போரின் பயனாகச் சோழமண்டலம் முழு வதும் ஆதித்தனுக்கு உரித்தாயிற்று. பிறகு தொண்டை மண்டலமும் அவனது ஆட்சிக்குள்ளாயிற்று. பல்லவரும் குறுநிலமன்னராய்ச் சோழமன்னர்கட்குத் திறை


  1. 5. The Tiruvalangadu Plates of Rajentlra Chola I Soutll Indian Inscriptions Vol. III No. 205; Kanyakumari Inscription of Vira Rajendra Deva. Epigraphia Indica Vol. XVIII No. 4.