பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

முதற் குலோத்துங்க சோழன்

அவ்வூரையும் எரியூட்டினான்;[1] பின்னர், அம்மாகாணத்திலுள்ள சக்கரக்கோட்டமண்டலத்தை ஆண்டுவந்த தாராவர்ஷன் என்னும் வேந்தனோடு போர்புரிந்து அவனைத் தனக்குத் திறை செலுத்தும்படி செய்தான்.[2] இங்ஙனம் இராசேந்திரன் வடபுலத்தில் பெருவீரத்துடன் போர் செய்துகொண்டிருக்கும் நாட்களில் தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்தில் அதிராசேந்திரசோழன் விண்ணுலகெய்தியதை யறிந்து சோழநாட்டிற்கு விரைந்து வந்தனன்.


  1. 3. S. I. I. Vol. III. No. 418 ; க. பரணி தா. 239. வயிராகரத்தில் யானைகளும் வைரச்சுரங்கங்களும் முற்காலத்தில் மிகுதியாக இருந்தன என்று 'அயினி அக்பரி' கூறுகின்றது. இது சக்கரக்கோட்டத்திற்கு அண்மையிலுள்ளது. (Epi. Ind. Vol. X. No. 4.)
  2. 4. S. I. I. Vol. III. No. 68 ; க. பரணி - தா. 241. சக்கரக்கோட்டம் என்பது மத்திய மாகாணத்திலுள்ள வத்ஸ ராச்சியத்தில் உள்ளது. (Baster State) இஃது இது போது இந்திராவதி ஆற்றின் தென்கரையில் இருக்கிறது; சித்திரக் கூடம் (Chitrakut) என்று வழங்கப்படுகின்றது; தற்காலத் தலைநகராகிய ஜகதல்பூருக்கு மேற்கே 25 மைல் தூரத்தில் உள்ளது. (Epi, Ind. Vol. IX. page 178.) இதனைத் தலைநகராகக்கொண்டது சக்கரக் கோட்ட மண்டலம் ஆகும். குருஸ்பால் என்ற விடத்திலுள்ள ஒரு கல்வெட்டு "சக்கரக்கூடாதீஸ்வரனாம்.........தாராவர்ஷநாமோ நரேஸ்வரா" என்று கூறுகின்றது. இதனால், சக்கரக்கோட்ட மண்டலத்தை ஆட்சிபுரிந்தவன் தாராவர்ஷன் என்பது உறுதி எய்துகின்றது. (Do-pages 161 & 179)