பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குலோத்துங்கன் சோழமண்டலத்தில் முடிசூடுதல்

33

எய்தினான். உடனே உண்ணாட்டுக் குழப்பமும் கலகமும் ஒழியவே, சோழமண்டலமெங்கும் அமைதி நிலவிற்று. அப்பொழுது சிற்றரசர்கள் இவன் அடிமிசை அறுகெடுத்திட்டு வணங்கினர் ; அந்தணர் 'அரசர் பெருமான் நீடு வாழ்க' என்று வாழ்த்தினர் ; மனுநெறி எங்கும் தலையெடுக்கவே இவன் புகழ் யாண்டும் பரவுவதாயிற்று. இவனது பேராற்றலையும் இவனால் சோணாடு அடைந்த நலங்களையும்,

          நிழலிலடைந்தன திசைகள்
               நெறியிலடைந்தன மறைகள்
          கழலிலடைந்தனர் உதியர்
               கடலிலடைந்தனர் செழியர்.

          பரிசில்சுமத்தனர் கவிஞர்
               பகடுசுமந்தன திறைகள் அரசு
          அசுமந்தன இறைகள்
               அவனிசுமந்தன புயமும்.

எனவரும் கலிங்கத்துப்பரணி தாழிசைகளால் உணரலாம்.

குலோத்துங்கன் சோழநாட்டு ஆட்சியைப் பெற்றமை பற்றி வரலாற்றாராய்ச்சியாளர்க்குள் கருத்து வேறுபாடு உண்டு. அதிராசேந்திரசோழனைக் கொன்றோ அல்லது கொல்வித்தோ இவன் சோழநாட்டாட்சியைக் கைப்பற்றினன் என்பர் சிலர். வைணவர்களை அதிராசேந்திரன் துன்புறுத்தினமையால் அன்னோர் நிகழ்த்திய கலகத்தால் அவன் கொல்லப்பட்டானென்றும் அச் சமயத்தில் குலோத்துங்கன் சோழநாட்டு ஆட்சியைக்மு..கு. 3