பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

முதற் குலோத்துங்க சோழன்

பட்டங்களுள்,[1] நம் குலோத்துங்கன் இராசகேசரி என்ற பட்டம் பெற்றவன் ஆவான்.

இவ்வேந்தன் காலத்து நிகழ்ந்த போர்களுள்ளே ஒன்றிரண்டொழிய எஞ்சியன வெல்லாம் இவனது ஆட்சியின் பதினான்காம் ஆண்டிற்கு முன்னரே முடிவெய்தின. போர்களெல்லாம் ஒருவாறு முடிவுற்ற பின்னர், கி. பி. 1084-ஆம் ஆண்டில் இவன் சக்கரவர்த்தி என்ற பட்டமும்' 1090-ல் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டமும்[2] புனைந்துகொண்டு பல்வகையாலும் பெருமையும் புகழும் எய்தி இனிது வாழ்ந்துவந்தான். திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டம் புனைந்து ஆட்சி புரிந்த சோழமன்னருள் இவனே முதல்வன் ஆவான். இவனுக்குப் பின்னர் ஆட்சிபுரிந்த இவனது வழித்தோன்றல்களுள் ஒவ்வொருவரும் இப்பட்டம் புனைந்தே அரசாண்டுவந்தனர். 'திரிபுவன சக்கரவர்த்தி' என்ற தொடர்மொழி சேரமண்டலம், சோழமண்டலம், பாண்டி மண்டலம் ஆகிய மூன்றுக்கும் சக்கரவர்த்தி என்ற பொருளை யுணர்த்துவதாகும்.

இங்ஙனம் பெருமையுடன் வாழ்ந்துவந்த குலோத்துங்கன் நாட்டிற்கு நலம்புரியக் கருதி முதலில் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் அரசர்க்கு நெடுங்காலமாகச் செலுத்திவந்த சுங்கத்தை நீக்கினான். ஓர் அரசன் தன் நாட்டிலுள்ள எல்லா மக்கட்கும் இனிமை பயப்பனவாகப் பொதுவாகச் செய்யக்கூடிய நலங்களுள் இதனினும் சிறந்தது வேறு யாதுளது? இதனால் மக்கள் எல்லோரும் இவனை வாயாரவாழ்த்திச் 'சுங்கந்தவிர்த்த


  1. 1. சோழவமிச சரித்திரம் பக். 7.
  2. 2. S. I. I. Vol. III. page 131.