உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பத்தாம் அதிகாரம்
குலோத்துங்கனுடைய மனைவியரும் மக்களும்


குலோத்துங்கனது பட்டத்தரசியாக விளங்கியவள் மதுராந்தகி என்பாள். இவளே இவ்வேந்தனது முதல் மனைவி. இவளுக்குத் தீனசிந்தாமணி என்ற பெயரும் உண்டு. இவ்வரசி இவனது அம்மானாகிய இரண்டாம் ராசேந்திர சோழனது மகள். இவனுக்கு வேறு இரு மனைவியரும் இருந்தனர். அவர்கள் ஏழிசைவல்லபி, தியாகவல்லி என்ற இருவருமேயாவர். பட்டத்தரசியாகிய மதுராந்தகி என்பாள் குலோத்துங்கனது ஆட்சியின் இருபத்தாறாம் ஆண்டில் இறந்துவிட்டனள். பின்னர், இவனது மறொரு மனைவியாகிய தியாகவல்லி என்பவள் பட்டத்தரசியாயினள். இவளே இவ்வரசனது ஆட்சியின் பிற்பகுதி முழுமையும் பட்டத்தரசியாக விருந்து வாழும் பேற்றை எய்தியவள்.

'பொன்னின்மாலை மலர்மாலை பணிமாறியுடனே புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ்புடைவரச்- சென்னி யாணையுடனாணையை நடத்துமுரிமை தியாகவல்லி நிறைசெல்வியுடன் சேர்ந்துவரவே '[1]என்னுங் கலிங்கத்துப்பரணிப் பாடலால் பட்டத்தரசியாகிய தியாக வல்லியின் பெருமையும் அரசன் அவள்பால் வைத் திருந்த மதிப்பும் நன்கு விளங்கும். இவள் ' சிவனிடத்


  1. 1. க. பரணி- தா. 273. மு. கு. 5