பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

முதற் குலோத்துங்க சோழன்

துமையெனத் தியாகவல்லி-உலக முழுதுடையாள் ' என்று நம் குலோத்துங்கனது மெய்க்கீர்த்தியிலும் புகழப்பட்டுள்ளாள்.

இனி, ஏழிசைவல்லபியை 'ஏழிசை வளர்க்க வுரியாள்"[1]என்று ஆசிரியர் சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் கூறியிருத்தலால் இவள் ஏழிசையிலும் புலமையெய்தி அவற்றை இனிது வளர்த்துவந்தனள் என்பது நன்கு புலப்படுகின்றது.

நம் குலோத்துங்கனது மனைவியருள் பட்டத்தரசியாக விளங்கியவளைப் புவனமுழுதுடையாள் அல்லது அவனி முழுதுடையாள் என்றும், மற்றையோரை ஏழுலகுமுடையாள், திரிபுவனமுடையாள், உலகுடையாள் என்றும் அக்காலத்தில் வழங்கிவந்தனர் என்பது கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. அவர்களது இயற்பெயர்களோடு இப்பெயர்களையும் சேர்த்துச் சிறப்பிப்பது அந்நாளில் பெருவழக்கா யிருந்தது. இவ்வுண் மையை அக்காலத்துக் கல்வெட்டுக்களைக்கொண்டறியலாம்.[2]

மதுராந்தகி என்பவள் பட்டத்தரசியாக நிலவிய நாட்களில் புவனிமுழுதுடையாள் என்றும் அவனி முழுதுடையாள் என்றும் வழங்கப்பட்டனள். அப் போது, ஏழிசைவல்லபி, தியாகவல்லி என்ற மற்ற மனைவியர் இருவரும் ஏழுலகுமுடையாள் உலகுடை யாள் என்னும் சிறப்புப் பெயர்களை எய்தி வாழ்ந்தனர். மதுராந்தகி வானுலகடைந்தபின்னர்த் தியாகவல்லி


  1. 2. க. பரணி - தா. 272.
  2. 3. S. I. I. Vol. III page 177.