பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

முதற் குலோத்துங்க சோழன்

இவ்வேந்தன்மீது ‘ விக்கிரமசோழனுலா' என்ற ஓர் உலாப் பாடியுள்ளனர். இம் மன்னன் இப்புலவர் பெருந்தகையைப் பெரிதும் பாராட்டி ஆதரித்துவந் தான்.

இரண்டாம் மகனாகிய இரண்டாம் இராசராசன் என்பான் கி. பி. 1077 முதல் 1078 வரை ஓராண்டு, வேங்கி நாட்டில் அரசப் பிரதிநிதியாயமர்ந்து அதனை அரசாண்டனன் ; பின்னர், தன் தந்தையிடத்தமர்ந்து அணுக்கத் தொண்டுகள் புரிதல்வேண்டுமெனச் சோழ மண்டலத்திற்குத் திரும்பிவந்துவிட்டான்.[1]

மூன்றாம் மகனாகிய வீரசோழன் என்பவன் தன் தமையனாகிய இரண்டாம் இராசராசனுக்குப் பின்னர் வேங்கி நாட்டிற்கு அரசப்பிரதிநிதியாக அமர்ந்தான்.[2]

அங்கு அவனது ஆட்சி பல ஆண்டுகள் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்று தெரிகிறது.

குலோத்துங்கனது மற்றை மக்களைப்பற்றிய வரலாறு இப்போது புலப்படவில்லை.

குலோத்துங்கன் சுற்றத்தினர்:

1. தந்தையைப்பெற்ற பாட்டன் ... விமலாதித்தன்.

2. தந்தையைப்பெற்ற பாட்டி ... குந்தவ்வை II.

3. தந்தை ... கீழைச்சளுக்கியனாகிய இராசராச நரேந்திரன்.

4. தாய் ... அம்மங்கைதேவி I.

5. உடன் பிறந்தாள் ... குந்தவ்வை III.


  1. S. I. I. Vol. No. 39-A Grant of Virachoda. Do.
  2. Do Do.