உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல்

87

வாதல் செலுத்தப்பெறுவது வழக்கம்.[1] இக்காணிக் கடனை ஊர்ச்சபையார் குடிகளிடத்திலிருந்து ஆண்டு தோறும் வாங்கி அரசனது தலைநகரிலுள்ள அரசாங்கக் கருவூலத்திற்கு அனுப்புவர். மூன்றாம் ஆண்டு தொடங்கியும் கடந்த ஈராண்டிற்கும் நிலவரி கொடாத வர் நிலங்கள் ஊர்ச்சபையாரால் பறிமுதல் செய்யப்பட்டு விற்கப்படுவது வழக்கம். அங்ஙனம் விற்றமையால் கிடைத்தபொருள் அரசாங்கத்தில் சேர்ப்பிக்கப் பெறும்.

இனி, நிலவரியேயன்றிக் கண்ணாலக்காணம், குசக்காணம், நீர்க்கூலி, தறியிறை, தரகு, தட்டாரப்பாட்டம் இடைப்பாட்டம், (இடைப்பூட்சி) ஓடக்கூலி, செக்கிறை,[2] வண்ணாரப்பாறை, நல்லா, நல்லெருது, நாடுகாவல், உல்கு ஈழம்பூட்சி முதலான பலவகை வரிகளும் இருந்துள்ளன.[3]

எனவே, அந்நாளில் பற்பல தொழில்களுக்கும் வரிகள் ஏற்பட்டிருத்தல் அறியத்தக்கது. வரிகளின் பெயர்கள் மிகுந்துள்ளமைபற்றி அரசாங்கவரிகள் அக்காலத்தில் மிகுந்திருந்தன என்று கருதற்கு இடமில்லை. ஒவ்வொரு தொழிலின் பெயரையும் சுட்டி வரிப்பெயர் குறிக்கப் பெற்றிருத்தலின் வரிப்பெயர்கள் மிகுந்து காணப்படு கின்றனவேயன்றி வேறில்லை. இந்நாளில் தொழில்வரி என்ற பொதுப்பெயரால் எல்லாத் தொழிலாளரிடத்தும் வரி வாங்கப்படுகின்றது. ஆகவே, இற்றைநாள் தொழில் வரி ஒன்றே எல்லாத் தொழில்களுக்குமுரிய பல்வகைத் -


  1. 6. S. I. I. Vol. II. Ins. No. 4 & 5.
  2. 7. S. I. I. Vol. III Ins. No. 9.
  3. 8. S. I. I. Vol. II. Nos. 98 & 99