பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

முதற் குலோத்துங்க சோழன்

'C. I. E. ' முதலான பட்டங்கள் அளித்து அரசாங்கத்தார் அவர்களை மகிழ்வித்ததுபோல, பதினொன்றாம் நூற்றாண்டில் நம் தமிழ்கத்தில் முடிமன்னனாக வீற்றிருந்து செங்கோல் ஓச்சிய நம் குலோத்துங்கனும் தன் அரசியல் அதிகாரிகளுக்குப் பல பட்டங்கள் வழங்கி அவர்களைப் பாராட்டியுள்ளான் என்பது ஈண்டு உணரத்தக்கது. அங்ஙனம் அரசனால் அளிக்கப்பெற்ற பட்டங்கள், மூவேந்தவேளான், கேரளராசன், காலிங்க ராயன், தொண்டைமான், வாணகோவரையன், பல்லவ ராயன், இளங்கோவேள், காடவராயன், கச்சிாரயன், சேதிராயன், விழுப்பரையன் முதலியனவாகும். இப்பட்டங்களை அரசன் பெரும்பாலும் தன் பெயர்களோடு இணைத்தே வழங்குவது வழக்கம்.

இதன் உண்மையைக் குலோத்துங்கசோழ கேரள ராசன், இராசேந்திர சோழ மூவேந்தவேளான், விருத ராசபயங்கர வாணகோவரையன், வீரசோழப் பல்லவ ராயன், சனநாதக் கச்சிராயன் என்று வழங்கப்பெற்றுள்ள பட்டங்களால் நன்குணரலாம். அன்றியும் பெருந்தரம், சிறுதரம் என்ற இரண்டு பட்டங்கள் இருத் தலைக் கல்வெட்டுக்களில் காணலாம். இவை அதிகாரி களது உயர்வு தாழ்வுகளாகிய வேறுபாடுகள் குறித்து இக்காலத்தில் வழங்கப்பெறும் Gazetted and Non Gazetted officer's போன்ற இருபிரிவுகளாகும்.

5. அரசிறை :-அக்காலத்தில் குடிகள் தம் அரசனுக்குச் செலுத்திவந்த நிலவரி காணிக்கடன் என்று வழங்கப்பெற்றுள்ளது. இக் காணிக்கடன் விளையும் நெல்லின் ஒரு பகுதியாகவாதல் பொன்னும்காசுமாக