பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

முதற் குலோத்துங்க சோழன்


டோரும் இங்குக் குறிக்கப்பெற்றோர்க்கு உறவினரும் தம் வாழ்நாள் முழுமையும் கிராமசபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பெறுதற்குத் தகுதியற்றவராவர்.[1]

பொதுமக்கள், கிராம சபையின் உறுப்பினரை ஆண்டுதோறும் குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுப்பது வழக்கமாகும். தேர்ந்தெடுத்தற்குக் குறிக்கப்பெற்ற நாளில் அரசாங்க அதிகாரி ஒருவர், சபை கூடுதற்கு அமைக்கப்பட்டுள்ள மாளிகையில் அவ்வூரிலுள்ள இளைஞர் முதல் முதியோர் ஈறாகவுள்ள எல்லோரையும் கூட்டுவர். அக்கூட்டத்தின் நடுவில் ஒரு குடம் வைக்கப்பெறும். அங்குள்ள நம்பிமாருள் வயது முதிர்ந்தார் ஒருவர் அக்குடததை எடுத்து அதனுள் ஒன்றும் இல்லை என்பதை எல்லோரும் அறியக்காட்டிக் கீழேவைப்பர். உடனே, அவ்வூரில் ஒவ்வொரு குடும்பிலுள்ளாரும் தமக்குத் தகுதியுடையார் என்று தோன்றுவோர் பெயரைத் தனித்தனி ஓலையில் எழுதி, அவ்வோலைகளை ஒருங்குசேர்த்து, அவை எக்குடும்பிற்குரியவை என்பது நன்கு புலப்படுமாறு அக்குடும்பின் பெயர் வரையப்பெற்ற வாயோலையொன்றைச் சேர்த்துக்கட்டி அக்குடத்தில் இடுவர். இங்ஙனமே எல்லாக்குடும்பினரும் குடவோலை இடுவர். பின்னர், அம்முதியார் அங்கு நடை பெறுவதையுணராத ஓர் இளைஞனைக்கொண்டு அக்குடத்தினின்றும் ஓர் ஓலைக்கட்டை எடுப்பித்து, அதனை அவிழ்த்து வேறு ஒரு குடத்திலிட்டுக் குலுக்கி, அவற்றுள் ஓர் ஓலையை அச்சிறுவனைக்கொண்டு எடுக்கச் செய்து, அதனைத் தாம் பெற்று, அங்குள்ள கரணத்தான் (கணக்கன்) கையிற்கொடுப்பார். அவன் தன் ஐந்து


  1. சோழவ மிச சரித்திரச் சுருக்கம் பக். 53, 55.