உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல்

97

பொன் தண்டமும் வேறு தண்டமும் சபையாரால் விதிக்கப்படும். [1]

இனி, நியாய விசாரணை நடத்தும் சம்வத்சரவாரியர் கொலை செய்தவனுக்குக் கொலைத் தண்டம் விதித்தலும், பிறவற்றிற்குச் சிறையிடுதலும், தளையிடுதலும், பொன் தண்டம் விதித்தலும் வழக்கம். அறியாமையால் தற்செயலாக நேர்ந்த சாவிற்கெல்லாம் அவ்வவற்றிற்கு ஏற்றவாறு திருக்கோயில்களில் விளக்கிடுவதற்குக் குற்றவாளிகள் பொன் கொடுக்குமாறு சபையார் தீர்ப்புக் கூறுவர். வேட்டைக்குச் சென்றோன் ஒருவன் எய்த அம்பு குறி தவறி ஓர் உழவன் மேற்பட்டு அவன் இறந்ததற்கும், ஒருவன், தன் மனைவியைத்தள்ள, அவள் விழுந்து இறந்தமைக்கும், ஒருத்தி, தன் மகள் மீது எறிந்த கோல்பட்டு அண்மையில் நின்ற வேறொருபெண் மாண்டதற்கும் திருக்கோயில்களில் விளக்கிடுமாறு தீர்ப்புக் கூறினரேயன்றி அன்னோர்க்குக் கொலைத்தண்டம் விதித்திலர். ஏற்றுக்கொண்ட கடமைகளை நிறைவேற்றா தொழிந்தவர்களுக்குப் பொன் தண்டம் விதித்தல் வழக்கம் என்பதும் அவர்கள் அதனைக் கொடாது ஓடிவிட்டால் அன்னோரது வீடு, காணி முதலியவற்றை அரசனது ஆணையின்படி விற்று ஊர்ச்சபையார் ஒழுங்கு செய்தல் வழக்கம் என்பதும் பல கல்வெட்டுக்களால் புலப்படுகின்றன.

11. ஆவணக்களரி :- அந்நாளில் ஊர்கள் தோறும் எழுதப்படும் ஆவணங்களைக் (பத்திரங்கள்) காப்பிட


  1. 16. Annual Report on Epigraphy of the Southern Circle for the year ending 31st March 1916, pages 115 & 116. மு. கு. 7