பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

மாதற்கேற்ப இந்தப் பிரிவினை மேலும் தன் ஆற்றலை இழக்கிறது. தெளிவு குறைந்த ஒன்றாகத் தோன்றுகிறது. இன்னர்தாம் இந்த நூலைப் படிக்கலாம், இன்ன நூலை இன்ன இனத்தவரே படிக்கலாம் என்ற பொருளற்ற வரையறைகளையும்,கட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்து, ஆண், பெண், மேலோர், கீழோர் ஆகிய பலரும் பல நூல்களைப் படிக்கவும், படித்துப் பயனும் அறிவும் பெறவும் வாய்ப்பும் ஆக்கமும் அளித்துவருவன இப்பொது நூலகங்களே.

எல்லோரும் பயன்படுத்துகின்ற பொது நூலகம் புதிதாகக் கோன்றிய ஒன்று அல்ல. முன்னர்க் கூறிய படி பதினேழாம் நூற்றாணடின் தொடக்கத்திலே, கவந்திரி(Coventry), நார்விச்சு, (Norwich),லைசெச்டர் (Leicester), இப்ச்விச் (Ipswich) போன்ற ஊர்களிலே,தனிப்பட்டவர்களின் நிதியுதவியினால், நகர் மன்ற நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதே நூற்றாண்டிலும், அதற்குப் பின்னும், குருமாருக்கும் பிறருக்கும் பயன்படும் நூலகங்களே ஏற்படுத்தப் பல முயற்சிகள் செய்யப்பட்டன. இந்த முயற்சிகளின் பயனாக 1653ல் தோன்றி இன்றும் நிலைத்து நிற்கின்ற நூலகங்தான் மாஞ்செசிடரில் (Manchester) உள்ள சேத்தம் நூலக (Chetham Library) மாகும். இந்நூலகத்தோடு தோன்றிய பிற சிறு நூலகங்கள் எல்லாம், பொருள் பற்றாக்குறை,ஊக்கமின்மை, கல்லதோர் ஆட்சியின்மை -ஆகிய குறைகளால் கால வெள்ளத்திலே மூழ்கி முறிந்து விட்டன. பொது நூலகத்தின் மெய்யான முன்னோடிகள், தனிப்பட்ட சந்தாநூலகங்கள், பொறியர் நிலைய நூலகங்கள் (Mechanics Institute Library) ஆகியவை