பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

1800-ல் தொழில் துறை மக்களுக்காக ஓர் வகுப்பு நடத்தத் தொடங்கினர். வகுப்பு மாணவர் பயன்படுத்தும் பொருட்டு விரைவில் ஒரு நூலகமும் ஏற்படுத்தப்பட்டது. ஆண்டுகள் சில சென்றன. தொழில் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து கிளாச்கோ பொறியர் கல்வி நிலேயம் ஒன்றை ஏற்படுத்தினர். இதனைப் பின்பற்றிப் பல நிலையங்கள் பின்னர் அடுத்தடுத்து நாடெங்கனும் தோற்றுவிக்கப்பட்டன. இதுபோன்று நிலையங்கள் 1849-ல் நானூறும், 1863-ல் எழுநூறும் ஏற்பட்டன. இத்தனை நிலையங்களும் மாணவர்களாலேயே நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சான் மின்டோ என்பார் தம்முடைய "பொது நூலக வளர்ச்சி வரலாறு" என்ற நூலிலே மேற்கூறிய பொறியர் கல்வி நிலையங்களைப் பற்றிக் கீழ்வருவாறு கூறுகின்றார் :- இந்த நிலையங்கள் பொதுமக்கள் படிப்பதற்கு வாய்ப்பளிப்பதன்மூலம் செய்த பணி அளவிடற்கரியது. செலவில்லாக் கல்வி கட்டாயத்துக்கு வருமுன்னர்ப் படித்த பெருமக்கள் எல்லோரும் கல்வியும், பொது அறிவும், வாழ்விலே முன்னேற்றமும் தமக்குக் கிட்டியமைக்கு இந்தப் பள்ளிகளுக்குப் பெரிதும் கடமைப்பட்டவர்களாவர் "இக் கூற்றை எவரும் மறுத்துரையார்;மறுக்கவும் முடியாது.

மேலும் பொது மக்களின் நல்வாழ்வுக்கு ஒரு நல்ல நூலகம் எத்தகைய பணியைச் செய்ய முடியும் என்பதைச் செயற்படுத்திக் காட்டியதின் மூலம், நல்ல நூலகத்தின் தேவையையும் பொது மக்களுக்கு இந் நூலகங்கள் அறிவுறுத்தின.